இந்தியன் 2 ஆல் தலையில் விழுந்த இடி.. அடுத்த AR ரகுமான்னு சொன்னாங்க! எந்திரிக்கவே முடியாது போல

Indian 2: பல வருடங்களாக ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு நடுவில் உருவான இந்தியன் 2 ஒரு வழியாக ரிலீசுக்கு தயாராகியுள்ளது. கமல், ஷங்கர் கூட்டணியில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் இதில் நடித்துள்ளனர். இதுவே ஆர்வத்தை தூண்டிய நிலையில் நேற்று இதன் இன்ட்ரோ வீடியோவும் வெளியானது.

ரஜினி வெளியிட்ட அந்த வீடியோவை பலரும் ஆர்வத்துடன் பார்த்த நிலையில் இப்போது அது பற்றிய விமர்சனங்கள் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதாவது முந்தைய பாகத்தில் உள்ள ஒவ்வொரு காட்சியும் இன்றளவும் மறக்க முடியாததாக இருக்கிறது.

அதேபோன்று ஏ ஆர் ரகுமானின் இசையும், சேனாபதியாக மிரட்டிய கமலும் படத்தை தாங்கிப் பிடித்தனர். ஆனால் நேற்று வெளியான வீடியோவில் அனிருத்தின் இசை பயங்கர சொதப்பலாக இருந்தது. இதை நிச்சயம் ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

Also read: சேனாபதி கெத்தை சல்லி சல்லியா நொறுக்கிய அனிருத்.. இந்தியன் 2 பரிதாபங்கள்

அதிலும் அனிருத் வழக்கம் போல இதில் பழைய மியூசிக்கை காப்பி அடித்துள்ளார். அதன்படி ஷங்கரின் ஜீன்ஸ் படத்தின் வரும் கொலம்பஸ் பாடலின் மியூசிக் இந்தியன் 2 வில் இருப்பது ரசிகர்களால் கண்டறியப்பட்டுள்ளது. அதுதான் இப்போது சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

ஏற்கனவே லியோ படத்தில் இருக்கும் ஆர்டினரி பர்சன் பாடல் காப்பி என்ற சர்ச்சை வைரல் ஆகி வருகிறது. இதற்கு முன்பாக ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் கூட பழைய எம்ஜிஆர் பாடலில் இருந்து சுட்டது என ரசிகர்கள் அம்பலப்படுத்தி வந்தனர். இதில் இந்தியன் 2 சர்ச்சையும் அனிருத் தலையில் இடியாக இறங்கி இருக்கிறது.

கடந்த 10 வருடங்களாக மாஸ் காட்டி வந்த இவர் அடுத்த ஏ ஆர் ரகுமான் என்று கூட பேசப்பட்டார். ஆனால் இப்போது அவர் மீது எழும் இந்த சர்ச்சைகள் அவரை காலி செய்யும் அளவுக்கு இருக்கிறது. இது நீடித்தால் அனிருத் இனிமேல் இசையமைப்பாளராக நீடிக்க முடியாது, காணாமல் போய்விடுவார் என்ற கருத்துக்களும் இப்போது தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

Also read: முதல் பாகத்திலேயே சங்கருக்கு ஏற்பட்ட பிரச்சனை.. ஹிட்டானாலும் ராசியே இல்லாமல் முடிவு கிடைக்காத இந்தியன் 2