புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

வண்டியை மடக்கி பிடித்த முத்து.. மீனாவிற்கு கொட்டும் பணமழை, பிடுங்க நினைக்கும் மனோஜ்

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனா கஷ்டப்பட்டு கட்டின 500 பூ மாலையை வண்டியில் ஏற்றி அரசியல்வாதி வீட்டுக்கு முத்து அனுப்பி விட்டார்.

இதை தெரிந்த சிட்டி போகும் வழியிலேயே வண்டியை மடக்கி பிடிக்க வேண்டும் என்று பிளான் பண்ணினார். அதற்கு ஏற்ற மாதிரி அவருடைய அடி ஆட்கள் வண்டியை திருடிக் கொண்டு போய் விட்டார்கள்.

இன்னும் பூமாலை வந்து சேரவில்லை என்று அரசியல்வாதி முத்துவிற்கு ஃபோன் பண்ணி கன்னா பின்னான்னு திட்டுகிறார். இதனால் எப்படியாவது வண்டியை கண்டுபிடித்து விட வேண்டும் என்று முத்துவும் மீனாவும் முயற்சி எடுத்து வருகிறார்கள். அதே நேரத்தில் போலீஸ் ஸ்டேஷனில் சொல்லி தேடுவதற்கும் நேரமில்லை.

முக்கியமாக அரசியல்வாதி என்ன வேணாலும் பண்ண தயங்க மாட்டார். அதனால் நம்மளே தேடினால் தான் சரியாகும் என்று இருவரும் தேடிக் கொண்டு அலைகிறார்கள். அப்பொழுது முத்துவின் கண்ணுக்கு அந்த வண்டி தென்பட்டு விட்டது.

அதை பாலோ பண்ணி அந்த வண்டியை மடக்கி பிடித்து விடுகிறார். முத்து அந்த அடி ஆட்களிடம் சண்டை போட்டு யார் உங்களை இந்த மாதிரி பண்ண சொன்னது என்று கேட்கிறார்.

Also read: ஒத்தையா ரெட்டையா போட்டு சீரியலை விட்டு விலகப் போகும் சிறகடிக்கும் ஆசை நாயகி.. சன் டிவிக்கு சொன்ன குட்பாய்

ஆனால் அவர்கள் எதுவும் சொல்லாமல் தப்பித்துக் கொள்கிறார்கள். உடனே மீனா அந்த வண்டியை செக் பண்ணி பார்க்கிறார். அதில் கட்டி வைத்த 500 பூ மாலை அப்படியே இருக்கிறது.

பிறகு முத்துவும் மீனாவும் சேர்ந்து அந்த வண்டியை எடுத்துட்டு போய் அரசியல்வாதி இடம் ஒப்படைக்கிறார்கள். அவர் இந்த 500 மாலையை பார்த்ததும் ரொம்பவே சந்தோஷத்தில் முத்துவை பாராட்டி சொன்னபடி 2 லட்சம் ரூபாயை கொடுத்து விடுகிறார்.

இதை எடுத்துட்டு வீட்டிற்கு வந்த முத்துவும் மீனாவும், அண்ணாமலையிடம் சொல்லி சந்தோஷப்படுகிறார். இதை பார்த்த ரோகினி மற்றும் விஜயா வயிற்றெரிச்சலில் பொங்குகிறார்கள்.

அதே நேரத்தில் இந்த பணம் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று மனோஜ் மனசுக்குள்ளே பிளான் பண்ணி இது எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்று நினைக்கிறார்.

இதனை அடுத்து மீனாவின் தோழிகள் உதவி பண்ணியதால் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தையும் கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்தை முத்துவிடம் கொடுத்து கார் வாங்க கொடுக்கிறார். ஆனால் முத்து அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். உனக்கு தேவையான நகையே வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்கிறார்.

அதற்கு மீனா எனக்கு நகை வேண்டுமென்றால் அதில் நீங்கள் சம்பாதித்து கொடுத்தால் மட்டும்தான் நான் போட்டுக் கொள்வேன். இதை வைத்து நீங்கள் கார் வாங்கிக் கொள்ளுங்கள் என்று மொத்த பணத்தையும் கொடுத்து விடுகிறார்.

Also read: ரோகினிக்கு மாமியாரும் கணவரும் சேர்ந்து கொடுக்கும் டார்ச்சர்.. முத்துவையும் மீனாவையும் பிரிக்க பிளான் பண்ணிய மச்சான்

- Advertisement -

Trending News