கலர் கண்ணாடி, டாட்டூ என கலக்கும் அஜித்.. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வெளியான குட் பேட் அக்லி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Ajith: அஜித்தின் விடாமுயற்சி எப்போதோ ஆரம்பித்தாலும் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. அதற்காக காத்திருந்து ரசிகர்கள் சோர்ந்து போனதுதான் மிச்சம்.

மூன்று கெட்டப்புகளில் அஜித்

good bad ugly
good bad ugly

அதனாலேயே அஜித் இனிமேலும் பொறுமை காக்க முடியாது என அடுத்த படத்தில் கமிட்டானார். அதன்படி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் குட் பேட் அக்லி அறிவிப்பு வெளியானது.

மேலும் அப்போதே படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என்ற அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் தொடங்கியது.

அது மட்டும் இன்றி சண்டை காட்சிகள் உட்பட சில காட்சிகள் படமாக்கப்பட்ட செய்தியும் மீடியாவில் வைரலானது. இதனால் குஷியான ரசிகர்கள் அடுத்த கட்ட அப்டேட் என்ன என கேட்டு வந்தனர்.

அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. அதில் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அசத்தலாக இருக்கிறார்.

மேலும் மூன்று தோற்றத்தில் கலர் கண்ணாடி, டாட்டூ என அவரின் தோற்றமே வேற லெவலில் இருக்கிறது. ஏற்கனவே இப்படத்தில் அவர் மூன்று விதமான குண நலன்கள் கொண்டவராக நடிக்கிறார் என கூறப்பட்டது.

அதற்கேற்றார் போன்று தற்போது போஸ்டரும் வித்தியாசமாக வெளிவந்துள்ளது. இதன் மூலம் மூன்று கேரக்டரா அல்லது ஒருவரே மூன்று குணம் கொண்டவராக நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -