பல நூறு கோடி சம்பளம், அனிருத்தின் அடுத்தடுத்த வெளிவர உள்ள 13 படங்கள்.. 2024-25 கிங் மேக்கர் நான்தான்

Music Director Anirudh’s lineup for 2024 and 2025: காலத்திற்கு தகுந்த மாதிரி ட்ரெண்டிங்கில் இசையமைத்து இளசுகளை கொண்டாட வைத்தவர் அனிருத். தமிழ் சினிமாவில் குறைந்த காலத்தில் அசுர வளர்ச்சி என்றால் அது நம் இளம் இசையமைப்பாளர் அனிருத் ஆகத்தான் இருக்க முடியும். தனுஷின் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத் ரவிச்சந்தர்.

3 படத்தில் இடம்பெற்ற “ஒய் திஸ் கொலவெறி சாங்” மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானார் அனிருத். தொடர்ந்து பேட்ட, பீஸ்ட், விக்ரம் என முன்னணி நடிகர்கள் மற்றும் வெற்றி இயக்குனர்களின் முதல் தேர்வு ஆனார் அனிருத். பாடல் இசையமைக்க  இயக்குனர்களிடம் நடிகர்களை மிஞ்சி அடாவடிக்காட்டி வருகிறார் அனிருத்.

2024 மற்றும் 2025  வரை 13 படங்களுக்கு மேலாக ஒப்பந்தமாகி பிஸியாக உள்ளார் அனிருத். இவை தவிர வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சி ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்.  கமல் நடிக்கும் இந்தியன் 2 மற்றும் 3 ஆகியவற்றில் ஒப்பந்தமாகி இசையமைத்து வருகிறார். மேலும் 2025 அன்பறிவு இயக்கத்தில் உருவாக உள்ள KH237க்கும் இவர்தான் இசையமைக்க உள்ளாராம்.

Also read: லோகேஷ், அனிருத்துக்கு வலை விரிக்கும் நடிகர்.. தும்பை விட்டு வாலை பிடிக்கும் சாக்லேட் பாய்

தலைவர் ரஜினிகாந்தின் இப்போதைய ஆஸ்தான இசையமைப்பாளராக விளங்கும் அனிருத், தலைவருடன் வேட்டையன் மற்றும் தலைவர் 171க்கு கமிட் ஆகியுள்ளார். அஜித்துடன் விடாமுயற்சி, சிவகார்த்திகேயனுடன் எஸ் கே 23, பிரதீப் ரங்கநாதனின் எல்ஐசி மற்றும் கவின் உடன் கவின் 04 என இவரது படங்களின் வரிசை நீண்டு கொண்டே செல்கிறது.

அட்லியுடன் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்த அனிருத் தற்போது மலையாளத்திலும் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இது தவிர தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்விகபூர் இணையுள்ள தேவார படத்தின் 1 மற்றும் 2 பாகங்களிலும் அல்லு அர்ஜுனின் திரிவிக்ரம் படத்திலும் விஜய் தேவரகொண்டாவின் VD 12 படத்திலும் மற்றும் மேஜிக் என்கிற கௌதம் படத்திற்கும் இசையமைக்க உள்ளார் அனிருத்.

படத்திற்கு தலா எட்டு கோடி முதல் 10 கோடி வரை சம்பளம் வாங்கும் அனிருத்தின் ஒரு வருடத்திற்கான வருமானம் மட்டுமே 150 கோடிக்கு மேல். “ஆல் இந்தியாலேயும் நம்ம தலைவர் கெத்து!”. திக்கெட்டும் பரப்பும்  இந்த தமிழனின் புகழ் நிலைபெற வாழ்த்துக்கள்.

Also read: பவுன்சர்கள் கலாச்சாரத்தை முதலில் அறிமுகப்படுத்திய நடிகர்.. அட்லீ, அனிருத் வரை பண்ணும் அழிச்சாட்டியம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்