எம்ஜிஆர், விஜய்க்கு அடுத்த வாரிசு நீங்கதான் என புகழ்ந்து தள்ளிய பிரபலம்.. ஓவர் புகழ்ச்சியால் புஷ்ன்ணு போன ஹீரோ!

கலை உலகில் எம்ஜிஆர் விஜய்க்கு அடுத்த வாரிசு என்று ஒரு நடிகரை மேடையிலேயே புகழ்ந்து தள்ளினார் ஒரு பிரபலம். ஓவர் புகழ்ச்சி உடம்புக்கு ஆகாது என்று அவருக்கு தெரியாது போல். யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை. இப்பொழுது அந்த நடிகரின் பெரிய பட்ஜெட் படம் ஃபெயிலியர் ஆகி அம்போவென்று மூலையில் உட்கார்ந்து இருக்கிறார்.

எப்பொழுதும் மக்களுக்கு பிடித்த ஹீரோ என்றால் அது எம்ஜிஆர் தான். அவருக்கு அடுத்து விஜய் தற்போது சிவகார்த்திகேயன் என்று மேடையில் சிவகார்த்திகேயனை புகழை பாடிக்கொண்டிருக்கிறார் சினிமா தயாரிப்பாளரும் டிஸ்ட்ரிபியூட்டருமான மதுரை சேர்ந்த அன்பு செழியன்.

Also Read: என்னது அஜித்தின் விட பிரின்ஸ் அதிக வியாபாரமா? இணையத்தில் படு கேவலமாக உருட்டும் ரசிகர்கள்

இப்பொழுது தீபாவளி அன்று ரிலீஸ் ஆன பிரின்ஸ் படம் சிவாவிற்கு பிளாப் ஆனது. இதன் மூலம் அவர் கடன் மேல் கடனில் மாட்டி தவிக்கிறார். முதல் முதலாக சிவகார்த்திகேயனின் படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது என ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் திரையரங்கில் குவிந்தாலும் கடைசியில் அந்த படம் மொக்க படமாக மாறியது.

இதனால் அவருடைய மனைவியே பிரின்ஸ் படத்தை பார்க்க முடியாமல் பாதியில் இருந்தே கிளம்பி விட்டார் என்ற செய்தியும் ஊடகங்களில் வெளியானது. முன்பு டாக்டர், டான் போன்ற இரண்டு படங்களில் 100 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரி குவித்த நிலையில், சிவகார்த்திகேயனுக்கு பிரின்ஸ் படம் படு தோல்வியை சந்தித்தது.

Also Read: சம்பாதிக்க புது ரூட்டை கண்டுபிடித்த விஜய், சிவகார்த்திகேயன்.. சத்தமில்லாமல் வச்சாங்க பாரு பெரிய ஆப்பு!

இருப்பினும் இளம் வயதில் சிவகார்த்திகேயனின் அசுர வளர்ச்சியை பலரும் புகழ்ந்து தள்ளுவதால் அதுவே அவருக்கு ஆப்பாக மாறிவிட்டது. இதனால் தீபாவளிக்கு பிரின்ஸ் படம் வசூலில் கலை கட்டும் என்று நினைத்தபோது அதற்கு மாறாக அமைந்தது.

மேலும் திரை பிரபலங்கள் பலரும் எம்ஜிஆர் விஜய்க்கு அடுத்த வாரிசு சிவகார்த்திகேயன் தான் என நினைத்துக் கொண்டிருக்கையில், அதற்கு மாறான சூழல் தற்போது நிலவுகிறது. மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக அயலான் மற்றும் மாவீரன் போன்ற இரண்டு படங்கள் வெளியாக உள்ளது. இந்தப் படங்களை தான் அவர் மலை போல் நம்பி இருக்கிறார்.

Also Read: ஆன்லைன் மாஃபியாக்களுக்கு இரையாகும் சிவகார்த்திகேயன்.. திடீர் வளர்ச்சியால் ஏற்பட்ட வயிற்றெரிச்சல்