மொத்த சம்பளத்தையும் அட்வான்ஸாக கேட்ட எம்ஜிஆர்.. தலை தெறிக்க ஓடிய முதலாளிகள் தஞ்சமடைந்த ஹீரோ

Actor MGR: நடிப்பு, அரசியல் என மிக பெரும் ஜாம்பவானாக திகழ்ந்த எம்ஜிஆர் பற்றி பல நல்ல விஷயங்கள் வந்திருக்கிறது. ஆனாலும் சினிமாவை பொருத்தவரையில் இவர் சில விஷயங்களில் ரொம்பவும் கரராக இருப்பாராம். அப்படி மொத்த சம்பளத்தையும் அட்வான்ஸாக கேட்கும் பழக்கம் இவருக்கு இருந்திருக்கிறது.

அந்த வகையில் தயாரிப்பாளர்கள் இவரிடம் தேதிகளை வாங்க செல்லும்போது இந்த விஷயத்தை அவர் முன் கூட்டியே சொல்லி விடுவாராம். அந்த வகையில் இவருக்கு அந்த காலகட்டத்தில் 3 லட்ச ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது.

Also read: உருகி உருகி காதலித்த சிவாஜி – பத்மினி.. சேராமல் போனதற்கு இப்படி ஒரு காரணமா?

அந்த முழு சம்பளத்தையும் இவருக்கு முன்பணமாக அதாவது படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே கொடுத்து விட வேண்டுமாம். அது மட்டுமல்லாமல் சில ஏரியாக்களின் உரிமையை கூட தர வேண்டும் என்று எம்ஜிஆர் கண்டிஷன் ஆக சொல்லி விடுவாராம்.

அதிலும் முக்கியமாக மதுரை ஏரியாவை எனக்கு தந்து விட வேண்டும் என்று அவர் கேட்டு வாங்கிக் கொள்வாராம். இந்த கண்டிஷன்களுக்கு எல்லாம் தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டால் மட்டுமே எம்ஜிஆர் அவர்கள் கேட்கும் தேதிகளை வாரி வழங்குவார்.

Also read: 5 சரித்திர கதாபாத்திரங்களாக திரையில் வாழ்ந்த சிவாஜி.. மெய் சிலிர்க்க வைத்த கட்டபொம்மனின் வசனங்கள்

இல்லை என்றால் யாராக இருந்தாலும் நோ என்று சொல்லிவிடுவாராம். அவர் எவ்வளவு பெரிய தயாரிப்பாளராக இருந்தாலும் இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் இருக்க வேண்டுமாம். அதன் காரணமாகவே லட்சக்கணக்கில் பணம் போட்டு படத்தை எடுக்கும் முதலாளிகள் எம்ஜிஆரிடம் இருந்து தலை தெறிக்க ஓடி இருக்கின்றனர்.

அப்படி ஓடியவர்கள் தஞ்சம் அடைந்தது சிவாஜியிடம் தான். ஏனென்றால் அவர்தான் இது போன்ற எந்த கெடுபிடிகளும் காட்டாமல் படத்தில் நடித்துக் கொடுப்பாராம். அது மட்டுமின்றி சில படங்களில் நடித்து முடித்துவிட்டு கூட இவர் சம்பளம் வாங்கி இருக்கிறார். இதனாலே இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வந்தது குறிப்பிடத்தக்கது.

Also read: இளம் ஹீரோக்களுடன் போட்டி போட்டு நடித்த சிவாஜியின் 5 படங்கள்.. 31 வருடத்திற்கு பின்னும் நின்னு பேசும் படம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்