விஜய்யை பத்தி பேசாதீங்க..! விஜயகாந்த் இறப்பிற்கு பின் கொந்தளித்த பிரபலம்

Messai rajendran talk about vijay in vijayakanth death: “உதவியவரின் கை உயரே இருந்தால்தான் உதவியும் உயர்வாக ஏற்றுக் கொள்ளப்படும்.” நன்றி மறந்த அவசர உலகம் தனக்கு நல்லது செய்தவர்களை ஞாபகம் வைத்துக் கொள்வது கடினமல்லவா.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் தேமுதிக கட்சியின் நிர்வாகியாகவும் இருந்த விஜயகாந்த்தின் மறைவிற்கு பொதுமக்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், கட்சி தொண்டர்கள் என அனைவரும் சாரை சாரையாக வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

விஜயகாந்த் அவர்கள் நடிகர் என்பதை தாண்டி தன்னலமற்ற தலைவனாக வாழ்ந்து உள்ளதையே இந்தக் கூட்டம் எடுத்துரைத்தது. தான் நடிக்கும் சமயத்தில் தன்னுடன் இருக்கும் கலைஞர்களை உயர்த்தியதோடு அவர்களின் துயரங்களுக்கு தோள் கொடுத்து நின்றவர் கேப்டன். நன்றி மறவாத பலரும் அவரது இறுதி அஞ்சலியில் கதறினார்.

கேப்டன் விஜயகாந்தின் தீவிர ரசிகர் மற்றும் அவர் கட்சித் தொண்டராக உள்ள மீசை ராஜேந்திரன் அவர்கள் விஜயகாந்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தாதவர்களையும்  அவர்  உடல்நிலை சரியில்லாத போது அவரை பார்க்க வராத இளைய தளபதி விஜய் பற்றியும் கடுமையாக சாடி தலைமைக்கும் தெரிவித்து உள்ளார்.

Also read: விஜயகாந்த் நம்பி வளர்த்தவைகள் & வளர்த்தவர்கள்.. இதனால் எந்த பிரயோஜனமும் இல்லாமல் இருந்த கேப்டன்..!

விஜய் அவர்கள் அரசியலுக்கு வருவதை உறுதி செய்யும் பொருட்டு பல நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளுவதும் அரசியல் தலைவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியும் வருகிறார். ஆனால் தன்னை சினிமாவில் கைத்தூக்கி விட்ட விஜயகாந்த்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறவில்லை என்று மீசை ராஜேந்திரன் ஆதங்கப்பட்டார்.

லியோ வசூலில் போட்ட சபதத்தால் தனது மீசை எடுக்க காரணமாக இருந்த காரணத்தினால் தான் என்னவோ விஜய் பற்றி, “பல காலம் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத போது பார்க்க வராதவர் இறுதி அஞ்சலிக்கு மட்டும் வந்தார்” என்று பிரேமலதா விஜயகாந்த்யிடம் கொளுத்தி போட, பிரேமலதா அவர்களோ விஜய் பத்தி பேச வேண்டாம்! அவங்களே தெரிஞ்சுகிட்டு கேப்டனை பார்க்க வந்திருக்க வேண்டும் என்பது போல் மீசை ராஜேந்திரனிடம் கூறியுள்ளாராம்.

இன்று முன்னணியில் இருக்கும் விஜய் அவர்கள் தன் ரசிகர்களுக்கு முன் உதாரணமாக கொஞ்சம் நன்றி பெருக்குடன் இருந்திருந்தால் நலமாக  இருந்திருக்கும் என்று விஜயகாந்தின் ரசிகர்கள் ஆதங்கப்படுவதிலும் தவறில்லையே.

Also read: விஜயகாந்த் வளர்த்து விட்ட 6 நடிகர்கள்..குடை பிடிக்க வந்து கொடூரமாக தாக்கிய மாமன்னன்!

- Advertisement -spot_img

Trending News