மயில்சாமி காமெடியில் கலக்கிய 6 படங்கள்.. வாட்ச்மேன் நாராயணனை மறக்க முடியுமா!

காமெடி நடிகர் மற்றும் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் என்று பல பரிமாணங்களில் நகைச்சுவையாக நடித்து அனைவரும் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்தவர் தான் மயில்சாமி. இவர் நடித்த பல படங்களில் அதிகமாக மக்களை கவர்ந்த இவரின் ஆறு படங்களை பற்றி பார்க்கலாம்.

பாளையத்து அம்மன்: ராம நாராயணன் இயக்கத்தில் 2000 ஆண்டு ஒரு பக்தி திரைப்படமாக பாளையத்து அம்மன் வெளிவந்தது. இதில் மீனா, ராம்கி, திவ்யா உன்னி, விவேக் மற்றும் மயில்சாமி ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் விவேக் மற்றும் மயில்சாமி செய்யும் பட்டிமன்றம் அன்றைய காலகட்டத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கலாய்க்கும் விதமாகவும், அதை ரசிக்கும் படியாகவும் அழகாக நடித்துக் காட்டி இருப்பார்கள். இதில் இவர் செய்யும் காமெடிக்கும், குறும்புத்தனத்திற்கும் ஒரு அளவே இருக்காது.

உத்தமபுத்திரன்: இயக்குனர் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான காதல் நகைச்சுவை திரைப்படம் உத்தமபுத்திரன். இதில் தனுஷ், ஜெனிலியா, விவேக், பாக்கியராஜ் மற்றும் மயில்சாமி ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் மயில்சாமி சந்தோஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதில் இவர் வாரத்தின் கடைசி இரண்டு நாட்களை என்ஜாய் பண்ணக் கூடியவராகவும், மற்ற நாட்களில் வாரத்தின் கடைசி நாட்களுக்காக காத்துகிட்டு இருப்பேன் என்று நையாண்டியாக கூறி இருப்பார். இவர் சொல்ற விதத்தை பார்க்கும் போது சந்தோஷ் மாதிரி நமக்கும் இருந்தா நல்லா இருக்கும் என்று நினைக்கும் படி பேசி இருப்பார்.

Also read: சிவராத்திரி அன்று சிவனிடம் சென்ற மயில்சாமி.. கடைசி நிமிடங்களில் பேசிய நிறைவேறாத ஆசை

வீரம்: இயக்குனர் சிவா இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வீரம் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் அஜித்,, சந்தானம் மற்றும் மயில்சாமி ஆகியோர் நடித்தார்கள். இதில் மயில்சாமி, மரிக்கொழுந்து எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் இவர் அஜித்திடம் கல்யாணத்தைப் பற்றி பேசி ஒரு விருந்து ரெடியாக இருக்கும் இவருடைய அந்த காட்சிகள் இவரின் நகைச்சுவை தோற்றத்துடன் அழகாக வெளி காட்டி இருப்பார்.

கில்லி: தரணி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு விஜய்யின் விளையாட்டு திரைப்படமாக இது வெளிவந்தது. இப்படத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்தார்கள். இதில் மயில்சாமி, லைட் ஹவுசிங் வாட்ச்மேன் நாராயணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்தப் படத்தில் இவர் செய்யும் லூட்டியை யாராலும் மறக்க முடியாது.

Also read:  அஜித் போல் கோட் சூட் போட்ட பிரபல காமெடி நடிகர்.. நீங்க வேற லெவல்

தூள்: தரணி இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு தூள் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் விக்ரம், ஜோதிகா, ரீமாசென், விவேக் மற்றும் மயில்சாமி ஆகியோர் நடித்தார்கள். இதில் இவர் விவேக் உடன் செய்யும் காமெடி அதாவது கேன்சர் என்ற ராசியை பெரிய நோய் என்று விவேக்கை நம்ப வைத்தது மற்றும் திருப்பதியில் லட்டுக்கு பதிலாக ஜிலேபி தான் கொடுக்கிறார்கள் என்று இவர் செய்யும் அலப்பறையை இன்றும் மறக்க முடியாது.

படிக்காதவன்: சூரஜ் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு படிக்காதவன் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் தனுஷ், தமன்னா, விவேக் மற்றும் மயில்சாமி ஆகியோர் நடித்தார்கள். இதில் தனுஷின் நண்பராக மயிலு என்ற கதாபாத்திரத்தில் மயில்சாமி நடித்திருப்பார். இப்படத்தில் இவர் பேசிய வசனம் அதாவது நம்ம எல்லாரும் புதுசு புதுசா யோசிக்கிற கிரியேட்டர் மச்சான் யாரோ எழுதின புத்தகத்தை படிக்கிற மற்ற ஆட்கள் மாதிரி நம்ம கிடையாது என்று இவர் பேசியது படிக்க முடியல என்று கவலைப்படும் இளைஞர்களுக்கு ஒரு பூஸ்ட் கொடுக்கும் விதமாக நையாண்டியாக பேசி இருப்பார்.

Also read: 100 படங்களுக்கும் மேல் நடித்து மக்கள் மனதில் நிரந்தரமாக குடியேறிய மயில்சாமி.. காலமானார்!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்