புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ஸ்டிங் ஆபரேஷனல் நடை பிணமாய் மாறிட்டேன்.. கண்ணீர் விட்டு கதறி மன்னிப்பு கேட்ட மாதேஷ்

கடந்த சில நாட்களாகவே மீடியாவில் ஸ்டிங் ஆபரேஷன் என்ற ஒரு விஷயம் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மதன் ரவிச்சந்திரன் நடத்திய இந்த ஆபரேஷனில் மீடியா பிரபலங்கள் பலரும் சிக்கியுள்ளனர். அது சம்பந்தமாக வெளியாகி உள்ள வீடியோவில் பிரபலங்கள் பலரும் பணம், பரிசு பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்குவது அம்பலமாகி இருக்கிறது.

இதுதான் தற்போது இந்த பரபரப்புக்கு காரணமாகவும் அமைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் மக்கள் முன் வெகு பிரபலமாக இருக்கும் பத்திரிக்கையாளர்களே அந்த வீடியோவில் சிக்கியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் யூடியூப் பிரபலமான மாதேஷ் தன்னை பற்றி வந்த அந்த வீடியோவுக்கு தன்னிலை விளக்கம் கொடுத்து கதறியுள்ளார்.

Also read: எலும்பும், தோலுமாய் மாறிய ரோபோ சங்கர், காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த மனைவி!

அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னை ஒரு பத்திரிக்கையாளர் பிரபல நிறுவனம் ஒன்று முக்கியமான ஊடகவியாளர்களை சந்திக்கிறார்கள் என்றும் நீங்களும் கட்டாயம் வர வேண்டும் என கூறி அழைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அது பற்றி சரியான புரிதல் இல்லாமல் தான் அங்கு சென்றதாகவும் கூறியிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து அந்த வீடியோவில் நீங்கள் பார்த்த அனைத்தும் உண்மைதான். அந்த மீட்டிங்கின் போது நீங்கள் வந்து சென்றதற்காக பணத்தை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியதால் அன்பின் பேரில் அதை வாங்கி விட்டேன் என்றும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் நான் மதன் ரவிச்சந்திரன் மற்றும் அவருடைய குடும்பம் குறித்து பேசியது தவறுதான் என்றும் மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.

Also read: அம்பலமாக போகும் குணசேகரின் சூழ்ச்சி.. ரகசிய வீடியோவை பார்க்கும் அப்பத்தா!

அது தவிர நான் அங்கு சென்றது என்னுடைய நிர்வாகத்திற்கு தெரியாது என்றும் அந்த சந்திப்பில் அரசியல் பிரபலங்கள் மற்றும் தான் வேலை செய்யும் நிர்வாகம் பற்றி கொஞ்சம் மிகைப்படுத்தி பேசி விட்டதாகவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த சில நாட்களாக நான் நடை பிணமாய் மாறிவிட்டேன், என் குடும்பத்தினரும் மன கஷ்டத்தில் இருக்கிறார்கள்.

இந்த விஷயத்தை எனக்கான ஒரு பாடமாக நான் எடுத்துக் கொள்கிறேன். மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் என்னை சரியாக நிரூபித்து விடுவேன் என்றும் அந்த வீடியோவில் அவர் கூறியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் சூழ்நிலை கைதியாகி விட்டீர்கள் என்றும் இதுவும் கடந்து போகும் எனவும் ஆறுதல் கூறி வருகின்றனர். தற்போது மாதேஷ் வெளியிட்டுள்ள இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Also read: கன்னத்தை பழுக்க வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி.. தம்பி செஞ்ச வேலைக்கு இது பத்தாது

- Advertisement -

Trending News