சிம்புவை விடாமல் துரத்தும் மணிரத்னம்.. கமல் வேண்டாம்னு சொல்லியும் அடம் பிடிக்க காரணம்

Actor Simbu: மணிரத்னம், கமல் கூட்டணியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தக் லைஃப் படம் அறிவிக்கப்பட்டு விட்டது. தற்போது ஆண்டவர் தேர்தலில் பிஸியாக இருப்பதால் விரைவில் சூட்டிங் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.

ஆனால் அதற்கு முன்பே படத்திலிருந்து ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். சமீபத்தில் கால்ஷீட் காரணமாக துல்கர் சல்மான் இதிலிருந்து விலகினார்.

அதைத்தொடர்ந்து ஜெயம் ரவியும் வெளியேறி விட்டதாக செய்திகள் கசிந்துள்ளது. இந்நிலையில் சிம்பு துல்கர் சல்மானுக்கு பதில் நடிக்க கமிட் ஆகிவிட்டாராம்.

ஏற்கனவே இவர் கமலின் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார். ஆனால் அப்படம் இன்னும் ஆரம்பிக்கப்படாமல் தாமதமாகி கொண்டிருக்கிறது.

கமலுடன் இணைந்த சிம்பு

இதற்கு இடையில் தான் மணிரத்னம் இந்த வாய்ப்பை அவருக்கு கொடுத்திருக்கிறார். இத்தனைக்கும் கமல் வேண்டாம் என்றுதான் முதலில் சொல்லியிருக்கிறார்.

ஏனென்றால் சிம்பு நேரத்திற்கு சூட்டிங் வரமாட்டார். அதனாலேயே கமல் கொஞ்சம் யோசித்து இருக்கிறார். ஆனால் மணிரத்னம் பிடிவாதமாக இவர் தான் நடிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டாராம்.

இதற்கு முன்பே செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு நடித்திருக்கிறார். அப்போது மணிரத்னமே அவருடைய வீட்டிற்கு சென்று படப்பிடிப்புக்கு அழைத்து வருவாராம்.

மணிரத்னம் கொடுத்த வாய்ப்பு

அதிலிருந்து தான் சிம்பு பழைய சேட்டைகளை எல்லாம் குறைத்து ஆளே மாறினார். சுருக்கமாகச் சொன்னால் இவரை நல்ல முறையில் மாற்றி கை தூக்கி விட்ட பெருமை மணிரத்னத்திற்கு உண்டு.

அதனாலேயே இப்படத்தில் கமலுக்கு வில்லனாக சிம்புவை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார். பொன்னியின் செல்வனில் கூட இப்படி ஒரு முயற்சி நடந்தது.

ஆனால் அது கைகூடாமல் போன நிலையில் தற்போது மணிரத்தினம் நல்ல வாய்ப்பை சிம்புவுக்கு கொடுத்திருக்கிறார். இதை அவர் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்