கமலஹாசனுடன் இணையாத மலையாள சூப்பர் ஸ்டார்.. விக்ரமிற்கு பின் நிகழப்போகும் தரமான சம்பவம்

கமலஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் வேலைகளுக்காக கமல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

தேர்தல் பரப்புரையை விட விக்ரம் பட புரமோஷனுக்காக கமல் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார். இதற்காக கமல் கேரளா சென்று இருந்தார். அப்போது மோகன்லால் தொகுத்து வழங்கும் மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்ச்சியில் விக்ரம் படத்தின் டிரைலர் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அதன் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய கமல்ஹாசன், மலையாள சூப்பர் ஸ்டார் ஆன மம்முட்டியுடன் தான் நடிக்க விரும்புவதாக தெரிவித்தார். ஏற்கனவே உன்னைப்போல் ஒருவன் படத்தில் கமலுடன் இணைந்து மோகன்லால் நடித்திருந்தார்.

ஆனால் மம்முட்டியுடன் இணையும் வாய்ப்பு தற்போது வரை கமலுக்கு கிடைக்கவில்லை. இதுபற்றி கூறுகையில் பல முறை நானும் மம்முட்டியும் படத்தின் கதையைப் பற்றி விவாதிப்போம். ஆனால் எதுவும் எங்களுக்கு ஏற்றாற்போல் அமையவில்லை.

நான் ஓரளவு திருப்தி அடைந்தாலும், கொஞ்சம் பொறுங்கள் நல்ல கதையாக அமையட்டும் என மம்முட்டி மறுத்துவிடுவார் என கமலஹாசன் கூறினார். ஆனால் விக்ரம் படத்தின் ரிலீசுக்கு பிறகு மம்முட்டி என்னுடன் நடிக்க நிச்சயம் சம்மதிப்பார் என்று நம்புகிறேன் என கமல் கூறியுள்ளார்.

இதனால் கமல் இதுவரை நடித்திராத புதிய பரிமாணத்தில் இப்படத்தில் நடித்திருப்பார் என கூறப்படுகிறது. மேலும் விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர். இப்படத்தில் உலக நாயகனை வைத்து லோகேஷ் ஒரு தரமான சம்பவம் செய்துள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

- Advertisement -