ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதைத்தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்து வருகிறார்.
மாளவிகா மோகன் படங்களில் பிசியாக இருந்தாலும் சமூக வலைதள பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். இவர் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்ட ஏராளமான ரசிகர்கள் பெற்றுள்ளார். அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 3.1 மில்லியன் பேர் இவரை ஃபாலோ செய்கிறார்கள்.
தற்போது மாளவிகா மோகன் மாலத்தீவு சென்றுள்ளார். அங்கு இவர் எடுக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் இந்த போட்டோக்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மாளவிகா மோகன் எடுத்த புகைப்படங்களை யாரோ போட்டோஷாப் செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இதை சிலர் பரப்பி வருகின்றன. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்கள், ஊடகங்கள் என பல இடங்களில் பரவி உள்ளது.

இந்த புகைப்படங்கள் மாளவிகா மோகனன் கண்களிலும் பட்டு அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனால் மிகுந்த கோபத்தில் உள்ள மாளவிகா மோகன், இது போன்ற போலியான, மோசமான ஒன்றை கண்டால் உடனே புகார் அளிக்கவும் என அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த அவருடைய ரசிகர்கள் வருத்தத்தை தெரிவிக்கின்றனர். ஒரு சிலர் இவரே படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் இவர் போட்டோவை எப்படி சித்தரித்தால் என்ன என மாளவிகா மோகனனை விமர்சித்து வருகிறார்கள்.
நான்தான் பிகினி போட்டோவை வெளியிட்டு இருக்கேன், நீங்க எதுக்கு தேவை இல்லாம எடிட் பண்ணனும். பிகினி போட்டோவை தாண்டி மேலே துணி இல்லாத புகைப்படத்தை வெளியிட்டு மாளவிகா மோகனன் வெறுப்பேற்றி உள்ளனர். இதனால் அம்மணி கடும் கோபத்தில் உள்ளாராம்.
