நயன்தாரா ஸ்டைலில் தனிவிமானம், தனி தீவு.. தேனிலவுக்கு புறப்பட்ட மகாலட்சுமி-ரவீந்தர்

சின்னத்திரை நடிகை மகாலட்சுமியும், தயாரிப்பாளர் ரவீந்தரும் கடந்த வாரம் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஒன்றரை வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ரவீந்தர் அவர்களது தேனிலவை பற்றி பதிவிட்டு இருக்கிறார்.

மகாலட்சுமி சன் மியூஸிக்கில் தொகுப்பாளராக அறிமுகமானவர். இப்போது சன் டிவியில் அன்பே வா சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார். ரவீந்தர் லிப்ரா ப்ரொடக்சன் கம்பெனியை நடத்தி வருகிறார். நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்து இருந்தார்.

Also Read: மகாலட்சுமி ஜோடியை கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பிரபலம்.. எல்லாரு மனசுலயும் இதான் இருந்துச்சு

இவர்கள் இருவரது திருமணமும் இப்போது சோசியல் மீடியாவில் பயங்கர ஹாட் டாபிக்காக போகிறது. இந்நிலையில் ரவீந்தர் ஒரு விமானம் முன்பு இருவரும் ஜோடியாக நிற்கும் புகைப்படத்தை போட்டு தனி விமானத்தில், தனி தீவுக்கு தேனிலவு செல்கிறார்கள் என்று எழுதி விடாதீர்கள் என்றும் திருச்சி குலதெய்வ கோவிலுக்கு செல்வதாகவும் இன்ஸ்ட்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ரவீந்தர் மகாலட்சுமி ஜோடி திருமணம் செய்ய இருப்பது திரை உலகிற்கு தெரியாமலே இருந்தது. திருமணத்திற்கு பிறகு இவர்கள் பதிவிட்ட புகைப்படம் மொத்த திரை உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் ரவீந்தரின் அதிகப்படியான உடல் எடை அனைவரும் ட்ரோல் செய்வதற்கு வாய்ப்பாக அமைந்தது.

Also Read:அவ குளிக்க மாட்டா, நான் வாட்டர் பெட்.. உச்சகட்ட காதல் போதையில் மகாலட்சுமி ஜோடி

ரவீந்தருக்கு வயது 52 எனவும், மகாலட்சுமிக்கு 30 என்றும் சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரவியது. இதற்கு பதில் அளித்த ரவீந்தர் தனக்கு 38 வயது தான் ஆகிறது என்றும், மகாலட்சுமிக்கு 35 வயது ஆகிறது என்றும் கூறினார்.

மகாலட்சுமி பணத்துக்காக திருமணம் செய்துகொண்டார் என்ற விமர்சனங்களுக்கு பதில் அளித்த மகா தன்னுடைய மாத வருமானம் மூன்று முதல் நான்கு லட்சம் என்று கூறினார். தன்னுடைய எடை குறித்து விமர்சனங்கள் வரும் என்று முன்னரே தெரியும் என ரவீந்தர் ஒரு பேட்டியில் கூறினார்.

Also Read: நயன்தாரா ரேஞ்சுக்கு அலப்பறை.. மஞ்சள் தாலியுடன் ஹனிமூன் போட்டோவை வெளியிட்ட மகாலட்சுமி

 

Next Story

- Advertisement -