நடிகைகளை கேவலமாக விமர்சித்த பிரதீப்.. வாய்ப்பு தராததால் வம்புக்கு இழுக்கும் கோமாளி பட ஹீரோயின்.!

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி,நடித்த லவ் டுடே திரைப்படம் திரையரங்கில் சக்கைபோடு போட்டு வருகிறது. படத்தின் பட்ஜெட் 5 கோடியில் எடுக்கப்பட்டிருந்தாலும், திரைப்படம் வெளியாகி 70 கோடி வரை வசூல் ஈட்டியுள்ளது. இதன் காரணமாக இப்படத்தில் நடித்த நடிகர்கள் முதல் படத்தில் காட்டப்பட்ட ஒவ்வொரு காட்சிகளும் இணையத்தில் வைரலாகியுள்ளது.

தற்போதுள்ள காலகட்டத்தில் உள்ள காதலர்கள் தங்களை எப்படி புரிந்து கொண்டுள்ளார்கள் என்பதை தெளிவாக பிரதீப் ரங்கநாதன் இப்படத்தின் கதையை எழுதி இயக்கியிருப்பார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் தெலுங்கு சினிமா வரை லவ்டுடே திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டு வரும் நிலையில் இத்திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் வளர்ந்து வரும் நடிகை ஒருவர் பிரதீப் ரங்கநாதனை கழுவி ஊற்றி உள்ளார்.

Also Read : நாய் சேகர் ரிட்டன்ஸால் தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்.. சிரிப்பாய் சிரிக்கும் முதல் நாள் வசூல்

2019ஆம் ஆண்டு பிரதீப் ரங்கநாதனின் இயக்கத்தில் நடிகர் லவ் டுடே நடிப்பில் கோமாளி திரைப்படம் வெளியானது.  இத்திரைப்படத்தில் ஜெயம்ரவியின் தங்கையாக ஆர்ஜே ஆனந்தி நடித்திருப்பார். படத்தின் முக்கியமான டயலாக்குகளும்,காட்சிகளும் அமைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதனிடையே இப்படத்திற்கு பின் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படமான லவ் டுடே திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதன் காரணமாக லவ் டுடே திரைப்படத்தின் வெற்றியை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஆர்.ஜே.ஆனந்தி தெரிவித்துள்ளார். பெண்களை தவறாக சித்தரிக்கும் ஆண்களை பெரிதாக இத்திரைப்படத்தில் காண்பித்துள்ளனர் என்றும் பிரபல நடிகையின் பெயரை இத்திரைப்படத்தில் வெளிப்படையாக பயன்படுத்தி அவரையும் அவமானப்படுத்தி உள்ளனர் என்று ஆர்.ஜே ஆனந்தி பேசினார்.

Also Read : ஒரு மொக்க படத்தால் திண்டாடும் ஜெயம் ரவி.. பொன்னியின் செல்வன் மரண ஹிட்டடித்தும் பிரயோஜனம் இல்லை

பொதுவாக ஆர்.ஜே ஆனந்தி பல சமூக நிகழ்வுகளை வெளிப்படையாக பேசி அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளவர்.இதன் காரணமாக அவர் எது பேசினாலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நோக்கத்தில், தனக்கு நடிக்க முதல் வாய்ப்பு கொடுத்த இயக்குனரையே அவமானப்படுத்தும் வகையில் பேசி வருவதாக பிரதீப் ரங்கநாதனின் ரசிகர்கள் கொந்தளித்து உள்ளனர்.

மேலும் படம் வெளியாகி உடனே விமர்சித்தால் கூட பரவாயில்லை, படம் வெளியாகி ஒரு மாதம் கழித்து வெற்றிப்பெற்றபின் பொறாமையில் ஆர்.ஜே. ஆனந்தி பேசிவருவதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். கோமாளி படத்திற்கு பின் ஆர்.ஜே ஆனந்திக்கு வேறு எந்த ஒரு பட வாய்ப்புகளும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை லவ் டுடே படத்தில் இவர் நடிக்க இருந்து பின் தூக்க பட்டிருக்கலாம் அந்த பொறாமையில் கூட இது போன்ற பப்ளிசிட்டி தேடுகிறார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Also Read : இயக்குனருடன் நெருக்கம் காட்டி நாசமா போன 19 வயது நடிகை.. வந்த வழியே திரும்பி பார்க்காமல் ஓடிய ஹீரோயின்

- Advertisement -spot_img

Trending News