பாராட்டுக்கும் விருதுக்கும் ஏங்கி விக்ரம் செய்த தரைமட்ட வேலை.. 5 வருஷம் ஆனதால் நம்பிக்கை இல்லாத சியான்

Vikram: விக்ரமை பொருத்தவரை கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி தன்னை வருத்திக்கொண்டு நடித்து வெற்றியை பார்க்கக் கூடியவர். அப்படிப்பட்ட இவருக்கு சமீப காலமாக படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு மக்களிடம் ரீச் ஆகவில்லை. இருந்தாலும் விடாமுயற்சியுடன் தொடர்ந்து பல வித்தியாசமான கெட்டப்புடன் படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான துருவ நட்சத்திரம் படம் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகிய நிலையிலும் வெளிவராமல் இருக்கிறது. காரணம் பண பிரச்சனையால் கடன் அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. அதனால் மீதமுள்ள கதையை எடுத்து முடிக்க முடியாமல் தத்தளித்து வருகிறது. அந்த வகையில் துருவ நட்சத்திரம் படம் கிட்டத்தட்ட 60 கோடி கடனில் இருக்கிறது.

இப்படத்தை கௌதம் மேனன் மற்றும் மற்ற இரண்டு நிறுவனமும் சேர்ந்து அதிக பட்ஜெட்டில் தயாரித்திருக்கிறார்கள். இதனால் மேற்கொண்டு பணம் தேவைப்படுவதால் என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே இழுத்தடித்து கொண்டு வருகிறார்கள். ஆனால் விக்ரம் நினைத்தால் துருவ நட்சத்திரம் படத்திற்கு ஏதாவது உதவி செய்து ரிலீஸ் பண்ணி இருக்கலாம்.

Also read: விக்ரமுக்கு மட்டும் எங்கிருந்து தான் பிரச்சனை கிளம்புதோ.. 5 ஆண்டுகளாக தவிக்கும் கௌதம் மேனன்

ஆனால் அப்படி அவர் ஏதும் செய்யாமல் துருவ நட்சத்திர படத்தை அப்படியே விட்டுவிட்டார். காரணம் இப்படம் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆனதால் எப்படியும் படம் பெருசாக மக்களிடம் எடுபடாது. அதனால் இப்படம் வெற்றி பெறுமா என்ற சந்தேகத்தில் துருவ நட்சத்திர படத்தை கண்டு கொள்ளாமல் இருக்கிறார். இதனை அடுத்து விக்ரம் முழு கவனத்தையும் இவருடைய தங்கலான் படத்தின் மீது மட்டும் தான் வைத்திருக்கிறார்.

காரணம் இப்படம் வெளிவந்தால் பாராட்டும் விருதும் விக்ரமுக்கு கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் முழு கவனத்தையும் தங்கலான் படத்தின் மீது காட்டி வருகிறார். ஏனென்றால் விக்ரமை பொருத்தவரை ஒரு படம் நடிக்கிறார் என்றால் அந்தப் படம் விருது வாங்கும் அளவிற்கு இருந்தால் மட்டுமே அவருக்கு மிகப்பெரிய திருப்தியை கொடுக்கும்.

அவரைப் பொறுத்தவரை விருது மட்டும்தான் முக்கியம் என்று நினைக்கக் கூடியவர். இந்த ஒரு காரணத்திற்காக துருவ நட்சத்திரம் படத்தை கண்டு கொள்ளாமல் தங்கலான் படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இதனால் கௌதம் தனி ஒரு ஆளாக நின்னு எப்படியாவது இந்த வருடம் முடிவதற்குள் படத்தை ரிலீஸ் பண்ண வேண்டும் என்று பல வழிகளில் முயற்சி எடுத்து வருகிறார்.

Also read: துருவ நட்சத்திரம் படத்திற்கு கௌதம் மேனனின் சாய்ஸ்.. விக்ரமுக்கு முன்பு லிஸ்டில் இருந்த 2 ஹீரோக்கள்