விக்ரமுக்கு மட்டும் எங்கிருந்து தான் பிரச்சனை கிளம்புதோ.. 5 ஆண்டுகளாக தவிக்கும் கௌதம் மேனன்

Vikram And Gautham Menon: விக்ரம் பொருத்தவரை சும்மா கேஷுவலா நடிச்சுக்கிட்டு போறவர் கிடையாது. கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னை வருத்திக் கொண்டு கதாபாத்திரத்துக்கு ஏற்ற மாதிரி நடிக்கக்கூடிய திறமையான ஒருவர். அப்படி இருந்ததால் மட்டுமே தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இடம் பிடிக்க முடிந்தது. ஆனால் சமீப காலமாக இவருடைய படங்கள் மக்களிடம் ரீச் ஆகவில்லை.

படத்தின் கதையும் பெருசாக சொல்லும்படியாக அமையவில்லை. அதனால் சற்று துவண்டு போய்விட்டார். கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் மறுபடியும் இவரை பார்த்த சந்தோஷத்தில் ரசிகர்கள் குதூகலமாக இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் வெளிவந்தால் மறுபடியும் இவருடைய மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்ளலாம்.

அதன் வாயிலாக கடந்த அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகின துருவ நட்சத்திரம் படத்தை இந்த மாதம் 24ஆம் தேதி ரிலீஸ் பண்ணி விடலாம் என்று முடிவு எடுத்திருந்தார்கள். ஆனால் தற்போது மறுபடியும் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப் பட்டிருக்கிறது. அதற்கு காரணம் பண நெருக்கடியில் இப்படம் இருப்பதால் ரிலீஸ் பண்ண முடியவில்லை.

Also read: தனுஷ், விக்ரம் படத்த தியேட்டர்ல வர விடல.. தயாரிப்பாளரின் முகத்திரையை கிழித்த பிரபல இயக்குனர்

இப்படத்தை கௌதம் மேனன் நிறுவனமும், மற்ற இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ஆனாலும் பண நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதுல வேற இப்படம் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் அடுத்தடுத்து பாகங்கள் உருவாக்க இருக்கிறேன் என்று கௌதம் பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

ஆனால் முதல் கோணல் முற்றும் கோணல் என்பதற்கு ஏற்ப எடுத்த முதல் பாகமே ரிலீஸ் பண்ண முடியாமல் தள்ளாடி கொண்டு வருகிறது. இந்த ஒரு விஷயம் விக்ரமுக்கு ரொம்பவே வருத்தத்தை கொடுத்திருக்கிறது. ஏற்கனவே இவருடைய படங்கள் எதுவும் சொல்லும் படியாக இல்லை. இதுல வேற நடிச்ச படத்தை வெளியிட முடியாமல் புதுசாக ஒரு பிரச்சனை கிளம்பி இருக்கிறது.

படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் திரைக்கு வராமல் இருப்பது அதிக வருத்தத்தை விக்ரமுக்கு கொடுக்கிறது.மேலும் இப்படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், ராதிகா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருக்கிறார். இதனை தொடர்ந்து கூடிய விரைவில் மறுபடியும் ரிலீஸ் தேதியை அறிவிப்பவர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: உயிர் போகும் அளவிற்கு உடலை வருத்தி விக்ரம் நடித்த 6 படங்கள்.. கொஞ்சம் மிஸ் ஆகிருந்தா கோமாவுக்கு போயிருப்பாரு

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்