lips kiss to Vijay in the crowd valaipechu Anthanan interview: தமிழக அரசியலில் மாற்றத்தை உண்டு பண்ண காத்திருக்கும் தளபதி தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
கிளைமாக்ஸ் காட்சிக்காக படக்குழு ரஷ்யா மற்றும் இலங்கை செல்ல இருந்தது. இலங்கையில் உள்ள தமிழ் இனத்துக்கு எதிரான முக்கிய தலைவர் ஒருவர் விஜய்யை காண ஆர்வம் தெரிவித்ததால் படப்பிடிப்பு இலங்கையில் வேண்டாம் என்று கூறி திருவனந்தபுரத்திற்கு மாற்றியமைக்கப்பட்டது.
காவலன் படத்திற்கு பின் கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு கழித்து படப்பிடிப்புக்காக கேரளா சென்றுள்ளார். தளபதியின் படங்கள் கேரளாவிலும் வெற்றிவாகை சூடுவதால் தமிழர்களைப் போன்றே கேரளாவிலும் ரசிகர்கள் அதிகம்,
படப்பிடிப்புக்காக விஜய் கேரளாவிற்கு வருகிறார் என்று தெரிந்த உடனேயே விமான நிலையத்தில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. படப்பிடிப்பின் இடையே ரசிகர்களுடன் சந்திப்பு உறுதியானது.
தளபதியை மாட்டிவிட்ட முத்தக்காட்சி
அவ்வப்போது ரசிகர்களுடன் செல்பி எடுத்து வலைதளத்தில் பதிவிட்ட விஜய்க்கு, சமீபத்தில் கேரளாவில் உள்ள சின்ன குழந்தை விஜய்க்கு முத்தம் கொடுத்தது.
நிலைமை இவ்வாறு போய்க்கொண்டிருக்க ஒரு வீடியோவில் விஜய்யை ரசிகர்கள் உணவு ஊட்டுகிறேன் என்ற பெயரில் உதட்டில் முத்தமிடுவது போல் ஒரு வீடியோ வலைதளத்தில் வைரலாக,
அது மார்ஃபிங் செய்து எடிட் பண்ண பட்ட கன்னட நடிகர் துனியா விஜய்யின் வீடியோவாம். இது தெரியாமல் வலைப்பேச்சு அந்தணன் அவர்கள் விஜய்யை பங்கமாய் கலாய்த்து வருகிறார்.
கேரளாவில் விஜய் உற்சாகமாக இருக்கிறார் என்றும், ரசிகர்கள் ஊட்டி விடுகிறேன் என்கின்ற பெயரில் கட்டிப்பிடித்து லிப் கிஸ் அடிச்சிடுறாங்க என்றும் இஷ்டத்துக்கு அளந்து விட்டார் அந்தணன்.
“குட்டிச்சுவத்தை எட்டிப் பார்த்தால் உயிரை கொடுக்க கோடி பேரு” என்பது போல் தளபதிக்காக தன் உயிரை துச்சமான மதிக்கும் ரசிகர்கள் இருக்க தளபதியை கலாய்த்தால் சும்மா விடுவார்களா!
வலைப்பேச்சு அந்தணனை கண்ணு தெரியாத கபோதி, கண்ணு அவிஞ்சு போச்சா என பலவாறு திட்டி தீர்த்து ட்ரோல் பண்ணி வருகின்றனர்.