உத்தமவில்லனிடம் சிக்கி சீரழிந்த லிங்குசாமி.. கண்டு கொள்ளாமல் கழண்டு கொண்ட கார்த்தி

Lingusamy re-release Karthi’s movie Paiya: ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்த இயக்குனர் லிங்குசாமி அவர்கள் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்.

தனுசுக்கு போட்டியாக பன்முகத் திறமையுடன் களம் இறங்குவேன் என்று லிங்குசாமி, தான் கற்ற மொத்த வித்தையையும் இறக்கி எடுத்த திரைப்படமே சூர்யாவின் அஞ்சான்.

தரமான கேங்ஸ்டர் ஸ்டோரி என ஏகபோகமாக புகழ்ந்து தள்ளினார் லிங்குசாமி. எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் அஞ்சி ஓடியது அஞ்சான்.  

கதையை கருத்தில் கொள்ளாமல் உலகநாயகன் கமலஹாசனை மட்டுமே மலைபோல் நம்பி உத்தம வில்லன் திரைப்படத்தை தயாரித்தார். 

உத்தமவில்லனால் லிங்குசாமி பலத்த கடன் பட்டு சிக்கி சீரழிந்து சின்னாபின்னமானார் என்று வலைப் பேச்சு அந்தணன் தெரிவித்து இருந்தார்.

பலத்த நஷ்டத்தை ஏற்படுத்திய பின்பு அதிலிருந்து மீண்டு வர மிகவும் சிரமப்பட்டு வருகிறார் இயக்குனர் லிங்குசாமி. 

2010 ஆம் ஆண்டு கார்த்தியின் நடிப்பில் வெளிவந்த பையா வெற்றிக்கு பின் எந்த ஒரு திரைப்படமும் லிங்குசாமிக்கு சொல்லிக் கொள்ளும் படியாக அமையவில்லை.

விஷாலின் சண்டக்கோழி  இரண்டாம் பாகமோ,  முதல் பாகம் கொடுத்த அளவு வெற்றியை பதிவு செய்யவில்லை

சினிமாவில் இப்போது வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டு வரும் லிங்குசாமியை, இவரால் பலனடைந்த நடிகர்கள் விஷால் மற்றும் கார்த்தி இருவரும், இவருக்கு கால்ஷீட் கொடுப்பதற்கு தயாராக இல்லை.   

சில லட்சங்களில் வைத்திருந்த கடனை கோடிகளில் ஏத்திவிட்ட உத்தம வில்லன் கமலோ, இவரை சற்றும் கண்டு கொள்வதில்லை. இதனால் தனது படங்களை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளார் லிங்குசாமி.  

பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த லிங்குசாமியின் பையா ரீ ரிலீஸ்

2010 ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த, கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில் வித்தியாசமான பயண அனுபவத்தை கொண்ட ரொமான்டிக் பேண்டஸி திரைப்படம் தான் பையா.

கார்த்தியின் கேரியரை திருப்பிப் போட்ட பையா திரைப்படத்தை தற்போது கமலா தியேட்டரில் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் லிங்குசாமி. 

இதன்பொருட்டு இங்கு வந்த லிங்குசாமியை ரசிகர்கள் உற்சாகம் மற்றும் ஆரவாரத்துடன் கொண்டாடி தீர்த்தனர் என்று கூறினார் வலைப் பேச்சு அந்தணன்.

Sharing Is Caring:

Leave a Comment

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்