புதன்கிழமை, நவம்பர் 13, 2024

லால் சலாம் படத்திற்கு டஃப் கொடுக்கும் லவ்வர்.. ஒரு வாரத்தில் செய்த கலெக்ஷன்

Lal Salaam And Lover One Week Collection : கடந்த வாரம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான லால் சலாம் படத்திற்கு போட்டியாக மணிகண்டன் நடிப்பில் உருவான லவ்வர் படம் வெளியாகி இருந்தது. மேலும் லால் சலாம் படத்தில் ரஜினி, விக்ராந்த், விஷ்ணு விஷால் என ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

அதோடு லைக்கா நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது. பிரபலங்கள் இந்த படத்துடன் போட்டி போட தயங்கிய நிலையிலும் மினிமம் பட்ஜெட் படமான லவ்வர் படம் போட்டியிட்டது. இதற்கு டஃப் கொடுக்கும் வகையில் ஒரு வாரத்தில் லவ்வர் படம் வசூலை வாரி குவித்து வருகிறது.

லால் சலாம் படம் ஒரு வாரத்தை கடந்த நிலையில் இப்போது 15 கோடி வசூல் செய்திருக்கிறது. மேலும் ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள், மிகப்பெரிய பட்ஜெட் என பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் லால் சலாமுக்கு டஃப் கொடுக்கும் வகையில் லவ்வர் படம் ஒரே வாரத்தில் 6 கோடி வசூல் செய்திருக்கிறது.

Also Read : கடைசியில ரஜினி தலையில் விழுந்த பழி.. சுக்குநூறாக உடைந்த ஐஸ்வர்யாவின் மனக்கோட்டை

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இவ்வாறு வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கிறது. இன்றைய காதலில் ஈகோ மற்றும் பொசசிவ்வால் என்னென்ன பிரச்சனை இருக்கிறது என்பதை லவ்வர் படத்தில் காட்டி இருந்தனர். இந்த படம் இப்போது ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்து வருகிறது.

மணிகண்டன் தொடர்ந்து வித்யாசமான கதைகள் மூலம் வெற்றி கண்டு வருகிறார். அந்த வரிசையில் ஜெய் பீம், குட் நைட் படங்களை தொடர்ந்து லவ்வர் படம் இணைந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் இரண்டாவது வாரத்திலும் இந்த படத்திற்கு நல்லா ஓபனிங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : சிவகார்த்திகேயன் கிரீன் சிக்னல் காட்டியும் 3 வருஷத்துக்கு பின் டேக்ஆப் ஆன பிளைட்.. ரஜினிகிட்ட போய் வந்தும் கிடப்பில் போட்டது

- Advertisement -spot_img

Trending News