பிரச்சனையை கிளப்பி விட்டு சினிமாவுக்கு டாட்டா காட்டும் விஜய்.. பெரிய பஞ்சாயத்தை இழுக்க போகும் டாப் ஹீரோக்கள்

Thalapathy Vijay: தேரை இழுத்து தெருவில் விட்டுட்டாங்க என்று ஒரு சொலவடை சொல்லுவாங்க. அதுக்கு அர்த்தம் பெரிய பிரச்சனையே கிளப்பி விடுவது தான். அதைத்தான் இப்போது நடிகர் விஜய் செய்திருக்கிறார். தளபதி அரசியல் கட்சி ஆரம்பித்து விட்டார்.

2026 சட்டமன்ற தேர்தலில் நின்று முதலமைச்சரும் ஆகிவிடுவார். இதுதான் இப்போதைக்கு விஜய் ரசிகர்களின் பெரிய கனவு. விஜய் அரசியல் சேவை செய்வதற்காக நான் சினிமாவை விட்டு விலகுகிறேன் என பகிரங்கமாக அறிவித்து விட்டார்.

விஜய், சினிமாவை விட்டு விலகுவது அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பெரிய கவலை தான். அவர் சினிமாவை விட்டு விலகும் போது இப்போதைய கோலிவுட் கலாச்சாரத்தில் இருக்கும் நிறைய டிரெண்டுகள் அப்படியே மாறிவிடும்.

நள்ளிரவு FDFS காட்சிகள் கூட இருக்குமா என்பது சந்தேகம்தான். மற்ற முக்கிய நடிகர்களுடன் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் போட்டி போட ஆள் இருக்க மாட்டார்கள். யாருக்கு யார் போட்டி என்று கணிக்க முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது. இது சினிமா தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் பெரிய நஷ்டம் தான்.

சினிமாவுக்கு முழுக்க போடும் விஜயை சுற்றி இருக்கும் சில சர்ச்சைகளும் அப்படியே மறந்து போகும். ஆனால் அவர் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்திருக்கும் பிரச்சனை ஒன்றுதான் இப்போது முடிவதற்கு வாய்ப்பில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்று சொல்வார்கள். அட வந்தவங்க எல்லாம் வாழ்ந்துட்டு போனா போதுமா, தமிழ்நாட்டில் இருக்கிறவங்க எப்ப வாழ்கிறது என்ற பிரச்சனை எல்லா துறையிலும் இருக்கிறது. இப்போ அது சினிமா துறைக்கும் பரவி விட்டது.

சினிமாவுக்கு கதாநாயகிகள் பெரும்பாலும் அண்டை மாநிலங்களில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுவார்கள். இந்த விஷயம் பெரிய அளவில் பேசப்படவில்லை. ஆனால் மற்ற பணிகளில் அண்டை மாநிலத்தவர் ஈடுபடுவது தான் இப்போது பெரிய பிரச்சினையாக மாறி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இது போன்ற முன்னணி ஹீரோக்களை இயக்குவதற்கும், அவர்களுடைய படங்களை தயாரிப்பதற்கும் காத்து கிடக்கின்றார்கள். ஆனால் விஜய் போன்ற ஹீரோக்கள் அசால்டாக அண்டை மாநிலத்தவர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்து விடுகிறார்கள்.

வாரிசு படத்தை இயக்கியதும் தெலுங்கு இயக்குனர் வம்சி தான். தயாரித்ததும் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூதான். எதையும் பற்றி யோசிக்காமல் விஜய் இந்த விஷயத்துக்கு பிள்ளையார் சொல்லி போட்டு விட்டார்.

இதை தொடர்ந்து தனுஷ் நடித்த பாரதி படத்தின் இயக்குனரும் தெலுங்கு சினிமாவை சேர்ந்தவர் தான். உலகநாயகன் கமலை வைத்து தமிழ் சினிமாவில் படம் இயக்குவதற்கு எத்தனையோ பெயர் தவம் கிடக்கிறார்கள்.

ஆனால் அவர் கல்கி படத்தின் மூலம் தெலுங்கு இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டார். அதேபோலத்தான் விஜய் சேதுபதி இப்போது இரண்டு தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படி தமிழ் சினிமா இயக்குனர்களை மறந்துவிட்டு இந்த முன்னணி ஹீரோக்கள் விஜய் போன பாதையில் பயணிக்கிறார்கள்.

இதற்கெல்லாம் முக்கிய காரணம் தெலுங்கு தயாரிப்பாளர்கள் இவர்களுக்கு கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுப்பதுதான். இது போன்ற முன்னணி ஹீரோக்கள் பணத்தை மட்டுமே பார்க்காமல் தாங்கள் வந்த வழியில் இருந்தவர்களை தூக்கி விடவும் முயற்சி செய்ய வேண்டும்.

விஜய் சினிமாவை விட்டு ஒதுங்கினாலும், அவர் பிள்ளையார் சிலை போட்டு வைத்து ஆரம்பித்த இந்த பிரச்சனை கூடிய சீக்கிரத்தில் பூதாகரமாக வெடிக்க போகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்