சினிமா இல்லாட்டாலும் நான் பொழச்சுப்பேன்.. ஆர்யாவின் காஸ்ட்லி பிசினஸ் என்ன தெரியுமா.?

Kollywood Actor Arya’s net worth: தமிழ் சினிமாவில் ரசிகைகளை அதிகம் கொண்டிருப்பதுடன் ஹீரோ, ஹீரோயின்களுக்கு கம்பர்ட்டபிள் ஆன கம்பனியன் என்றால் அது நம் ஆர்யாவாகத்தான் இருக்க முடியும். சக நடிகைகளுக்கு படப்பிடிப்பில் ஒத்துழைப்பு நல்குவதுடன் நட்பு ரீதியிலும் அவர்களின் அன்பை பெற்று விடுவது ஆர்யாவின் வாடிக்கை.

முதன்முதலாக உள்ளம் கேட்குமே படத்தில் நடித்தாலும் விஷ்ணுவர்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகமானவர் ஆர்யா. தொடர்ந்து தமிழில் மதராசபட்டினம், வேட்டை, அவன் இவன், நான் கடவுள் போன்ற படங்களில் நடித்து முன்னணி கதாநாயகர் ஆனார்.

ஆடி, பிஎம்டபிள்யூ என பல சொகுசு கார்களை வைத்திருக்கும் கார் பிரியரான இவர். ஒருமுறை சந்தானத்திற்கு கார் வாங்க போக, இவர் அதை ஓட்டிக்கொண்டு போய் சொந்தம் ஆக்கிய கதையை காமெடி நடிகர் சந்தானமே சொல்லியிருக்கிறார். சந்தானத்தின் நெருங்கிய தோழரான இவர், தினமும் ஒரு முறையாவது சந்தானத்துடன் பேசி விடுவது என்ற வழக்கத்தை கொண்டுள்ளாரம்.

Also read:  ஆர்யாவால் பட இயக்குனரை துரத்தி விட்ட அருண் விஜய்.. அவனுக்கு சாவு பயத்தை காட்டிட்ட எனக்குமா?

ஒரு படத்திற்கு ஏழு கோடி முதல் ஒன்பது கோடி வரை சம்பளம் பெரும் இவர். சினிமாவை தாண்டி ஹோட்டல் துறையிலும் கொடி கட்டி வருகிறார். வேளச்சேரியிலும் அண்ணா நகரிலும் இவருக்கு சொந்தமாக ஸீ ஷெல் என்ற பெயரில் ஹோட்டல் உள்ளது. அரபியன் வகை உணவுகளில் சுவை அல்லுமாம். என்ன ஒன்னு 30  ரூபாய் இருந்தா வயிறார சாப்பிடலாம் என்று ஆரம்பித்த ஏழைப் பங்காளனான சூரியின் அம்மன் ஹோட்டல் போல் அல்ல. ஹை கிளாஸ் பீப்பிள் மட்டுமே பயன்படுத்தும் ரேஞ்சுக்கு உணவகத்தில் கல்லா கட்டி வருகிறார் ஆர்யா.

பல காலமாக பெண் தேடி வந்த நிலையில் கஜினிகாந்த் படத்தில் தன்னுடன் நடித்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் திலீப் குமாரின் பேத்தி சாயிஷாவை காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் மனம் புரிந்து உள்ளார். இவர்களுக்கு ஆரியானா என்கிற மகள் இருக்கிறார்

தனது மகள் ஆரியானாவுடன் எப்போதும் பிசியாக இருக்கும் ஆர்யா, சைந்தவ், சார்பட்டா பரம்பரை 2  என ஒரு சில படங்களில் மட்டுமே கமிட்டாகி தனக்கு சொந்தமான பிசினஸை கவனித்துக் கொண்டு வருகிறாராம். சினிமாவை மட்டும் நம்பி இருக்க கூடாதாம் என்று பல தொழில் மன்னன் நண்பர்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறார்.

Also read: கார்த்தி, ஆர்யாவை கழட்டிவிட்டு, பையா 2-விற்கு பிரபல வாரிசு நடிகரின் மகனை களம் இறக்கும் லிங்குசாமி

- Advertisement -spot_img

Trending News