கில்லிக்கு போட்டியா ரீ ரிலீஸ் செய்யப்பட்ட அதே மாஸ் குறையாத விஜய் படம்.. காத்து வாங்கிய உதயம் தியேட்டர்

Ghilli re-released with success and at the same Vijay another one mass film get it loss: தமிழ் சினிமாவிற்கு  இந்த ஆண்டு போதாத காலம் என்னும் அளவுக்கு,

ஆண்டின் தொடக்கத்தில் இருந்து வெளிவந்த எந்த ஒரு தமிழ் திரைப்படமும் ரசிகர்களிடையே போதிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.

முன்னணி நடிகர்களின் படங்கள் ஓரளவு வசூலில் தன்னிறைவை அடைந்து விட்டு வந்த வேகத்தில் காணாமல் போகின்றது.

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மலையாள மொழி படங்களும், மற்ற மொழி படங்களும், இங்கு வந்து கொண்டாடும் அளவுக்கு தமிழ் படங்கள் அமையவில்லை என்பது  தான் உண்மை.

இந்நிலையில் முன்னணி நடிகர்களின், பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த வெற்றி படங்களை ரீ ரீலீஸ் செய்யும் கலாச்சாரம் தொடர்ந்து வருகிறது. 

தற்போது 2004 இல் தரணி இயக்கத்தில் வெளிவந்த கில்லி ரீ ரீலீஸ் செய்யப்பட்டு உலக அளவில் மாபெரும் வசூல் சாதனை செய்து வருகிறது.

விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ், மயில்சாமி, தாமு  என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து கபடி விளையாட்டை மையமாக வைத்து வெளிவந்தது தான் கில்லி திரைப்படம்.

“ஆல் ஏரியாவுலையும், ஐயா கில்லி!” என்பது போல் 20 ஆண்டுகள் பின்பு ரீ ரீலீஸ் செய்யப்பட்ட திரைப்படத்தை விஜய்யின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். திரையிட்ட திரையரங்குகளில் எல்லாம் வசூல் சாதனை செய்து வருகிறது கில்லி.

கில்லிக்கு போட்டியாக ரீ ரிலீஸ் செய்யப்பட்ட போக்கிரி

இதனால் ப்ரொடியூசர் ஏஎம் ரத்தினம் செம ஹப்பி! அதேபோல் கில்லிக்கு போட்டியாக ரீ ரிலீஸ் செய்யப்பட்ட தளபதியின் மாஸ் குறையாத மற்றுமொரு திரைப்படம் தான் போக்கிரி.

பிரபுதேவாவின் இயக்கத்தில் விஜய், அசின் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான போக்கிரி திரைப்படம் ரி ரிலீஸ் ஆகியுள்ளது.  மினி உதயத்தில்  போக்கிரி திரைப்படத்திற்காக இரண்டு ஷோ ஒதுக்கி உள்ளனர்.

போக்கிரி திரைப்படமும் வெளிவந்த பொதிதில் வெறித்தனமான மாஸ்சை உருவாக்கிய போதிலும், ரீ ரிலீஸ் இல் வெற்றிவாகை சுடவில்லை என்பதே உண்மை.

ஆனால்  காமெடி, ஆக்சன், காதல், வீரம் என அனைத்திலும் தெறிக்க விட்ட கில்லி திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தை, விஜய்யின் மற்ற படங்களால் கூட  ஏற்படுத்த முடிவதில்லை என்பதை நிச்சியமான உண்மை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்