குஷ்பூ சுந்தர் சி இன் பகிரை கிளப்பும் சொத்து மதிப்பு.. அரண்மனை10 வரை தயாரிப்பதற்கு குவிந்த காசு

kushboo Sundar C Networth: எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று குஷ்புவிடம் இருக்கத்தான் செய்கிறது. தொடர்ந்து 40 வருடங்களுக்கு மேலாக திரை துறையில் கலக்கி வரும் குஷ்பூ, தர்மத்தின் தலைவன் தொடங்கி  வருஷம் 16 படத்தின் மூலம் முன்னணி  கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். 40 வருடங்களுக்கு மேலாக தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் சினிமாக்களில் கதாநாயகி மற்றும் குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருகிறார்.

தொகுப்பாளினியாகவும், ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் விளம்பர படங்களிலும் நடித்து வந்த குஷ்பூ 2010ல் தடால் அடியாக அரசியலில் நுழைந்து  திமுக, காங்கிரஸ் மற்றும் பாஜக என மாறி மாறி அரசியலில் ஈடுபட்டு அவ்வப்போது காரசாரமான விவாதங்களில் வாயை விட்டு சர்ச்சைகளில் ஈடுபடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

கமர்சியல் படங்கள் மூலம் கிட் அடித்து கலக்கி வரும் இயக்குனர் சுந்தர் சி யை 2000  இல்  காதல் திருமணம் செய்தார். இவருக்கு அவந்திகா மற்றும் அனந்திதா என்ன இரு மகள்கள் உள்ளனர்.  ஆரம்ப காலங்களில்  சென்னை   போட் கிளப்பில் வசித்து வந்த குஷ்பூ தற்போது கணவருடன் சென்னை சாந்தோமில் வசித்து வருகிறார்.

Also Read : 2k கிட்ஸ் தோத்துருவாங்க போங்க.. தலைவர் ஸ்டைலில் இறுக்கி அணைச்சு முத்தம் கொடுத்த குஷ்பூவின் புகைப்படம்

எப்போதும் டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் மாருதி ஸ்விப்ட் காரில் வலம் வரும் குஷ்புவின் அசையும் மற்றும் அசையா சொத்து மதிப்பு 98 கோடிக்கும் மேல் என அறியப்படுகிறது. கணவர் சுந்தர்சியுடன் இணைந்து அவுனி சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம், படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களையும் இயக்கி வருகிறார்.

கமர்சியல் படங்கள் மூலம் கிட் அடித்து கலக்கி வரும் சுந்தர் சி யின் சொத்து மதிப்பு  120 கோடிக்கும் மேல்.  சுந்தர் சி யுடன் இணைந்து தயாரித்த படங்கள் கலகலப்பு, அரண்மனை போன்ற படங்கள் அனைத்தும்மே மெகா ஹிட். பன்முக திறமைகளை ஒருங்கிக் கொண்டு

சிம்பிளான தோற்றத்துடன் இருக்கும் குஷ்பூ நடிப்பை தாண்டி சர்ச்சைகள் கிசுகிசுக்கள், காரசாரமான விவாதங்கள், தடாலடி பதிவுகள் என மக்களோடு ஏதோ ஒரு வகையில் தன்னை இணைத்துக் கொண்டு  எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.

Also Read : அப்பாவை மிஞ்சிய உயரம், அமுல் பேபி போல் இருக்கும் அவந்திகா புகைப்படம்.. குஷ்பூவை ஓவர் டேக் செய்யும் அழகு