புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

என்ன திமிரு, ஆம்பளைய கைநீட்டி அடிக்கிற.. ஈஸ்வரி கன்னத்தை பழுக்க வைத்து குளிர் காய்ந்த கதிர்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் கடந்த பல மாதங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்து ரசிகர்களின் மனதில் சிம்ம சொப்பனமாக ஒய்யாரத்தில் இடம் பிடித்தது. ஆனால் சமீபத்தில் எதிர்நீச்சல் சீரியலுக்கு ஏற்பட்ட தடுமாற்றத்தினால் எப்படி நாடகத்தை கரையேற்ற வேண்டும் என்று தெரியாமல் தட்டு தடுமாறிக் கொண்டு வருகிறது.

அந்த வகையில் குணசேகரன் கேரக்டரில் நடித்த மாரிமுத்துக்கு பொருத்தமான ஆளை கூட்டி வரவேண்டும் என்று நடிகர் வேல ராமமூர்த்தியை நடிக்க வைத்து வருகிறார்கள். ஆனால் எந்த விதத்திலும் குணசேகரன் கேரக்டரை சொதப்பி விடக் கூடாது என்பதற்காக புதிதாக வந்த வேல ராமமூர்த்தியை ரொம்பவே கொடூரமாகவும், வில்லுத்தனத்தின் மறு உருவமாகவும் காட்டிக்கொண்டு வருகிறார்கள்.

Also read: பேசியே கொள்வான், இந்த குணசேகரன் கொன்னுட்டு தான் பேசுவான்.. அப்பத்தாவுடன் தோற்றுப் போகும் மருமகள்கள்

ஆனால் இதை பார்த்து வரும் ரசிகர்கள் இப்பொழுதுதான் நாங்கள் உண்மையிலேயே குணசேகரன் கேரக்டரை ரொம்பவே மிஸ் பண்றோம். ஏனென்றால் அவரிடம் இருக்கும் நக்கல் நையாண்டி ரசிக்கும் தன்மையான பேச்சு இவரிடம் இல்லை என்று கமெண்ட் பண்ணி வருகிறார்கள். இன்னொரு புறம் இவரை தவிர வேறு யாரு நடிச்சாலும் இந்த அளவிற்கு கச்சிதமாக இருக்காது என்று வேலராமமூர்த்திக்கு சப்போர்ட் செய்து வருகிறார்கள்.

இதற்கு அடுத்து வீட்டிற்குள் நுழைந்த குணசேகரன், நந்தினியை கூப்பிட்டு என்னுடைய வீட்டில் இருந்து வெளியில் சோத்தை வித்துக்கிட்டு இருக்கியா என்று கேட்கிறார். அதுக்கு நந்தினி வழக்கம்போல் அவருடைய நக்கல் மூளையை பயன்படுத்தி அப்ப நாங்கள் வெளியில் போய் இதை செய்யலாமா என்று கேட்கிறார். அதற்கு குணசேகரன் ஏய்… என்று மிரட்டி வாயடைக்க வைக்கிறார்.

Also read: வில்லத்தனத்தில் கதிகலங்க வைத்த ஆதி குணசேகரன்.. மொத்தமாக மாறிய கேரக்டர், திசை மாறும் எதிர்நீச்சல்

அடுத்தபடியாக ஈஸ்வரியை பார்த்து உனக்கு என்ன திமிரு இருந்தா ஒரு ஆம்பளைய நீ கைநீட்டி அடிக்கிற. உனக்கு எங்கிருந்து இந்த தெனாவெட்டு வந்துச்சு என்று கேட்கிறார். அதற்கு ஈஸ்வரி என்னுடைய சுயமரியாதைக்கு ஒரு களங்கம் ஏற்பட்டால் நான் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன். என் கேரக்டரை அசிங்கப்படுத்தும் போது அதற்காக நான் பதிலடி கொடுத்து தான் தீர்வேன் என்று சொல்கிறார்.

உடனே குணசேகரன் பளார் என்று ஈஸ்வரி கன்னத்தை பழுக்கும் அளவிற்கு ஓங்கி அறை போடுகிறார். இதைப் பார்த்ததும் அங்கு இருப்பவர்கள் அனைவரும் பதட்டத்தில் அப்படியே அடங்கிப் போய் விடுகிறார்கள். ஆனால் கதிர் மட்டும் கைதட்டிக் கொண்டு, இப்பதான் என்னுடைய பாரமே குறைந்தது. என்னுடைய மனசு குளுகுளு என்று இருக்கிறது என சந்தோஷத்தை கைத்தட்டி வெளிப்படுத்துகிறார். அடுத்து வழக்கம்போல் அப்பத்தா அங்கு இருக்கும் பெண்களுக்கு தைரியமான வார்த்தைகளை கொடுத்து ஊக்கப்படுத்தி வருகிறார்.

Also read: டிஆர்பி-யில் பின்னி பெடலெடுக்கும் டாப் 6 சீரியல்கள்.. குணசேகரனின் பெயரை வைத்து ஆட்டம் காட்டும் எதிர்நீச்சல்

- Advertisement -

Trending News