டிஆர்பி-யில் பின்னி பெடலெடுக்கும் டாப் 6 சீரியல்கள்.. குணசேகரனின் பெயரை வைத்து ஆட்டம் காட்டும் எதிர்நீச்சல்

This Week Serials TRP Ratings: வெள்ளித் திரையைப் போலவே சின்னத்திரைக்கும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது என்றால் அது சீரியலின் மூலம் தான். அனுதினமும் ஒளிபரப்பாகும் இந்த சீரியல்களில் எவை ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது என்பதை டிஆர்பி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அந்த வகையில் இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் இருக்கும் டாப் 10 சீரியல்களை எவை என்பது தெரியவந்துள்ளது. இதில் 10-வது இடத்தில் சன் டிவியின் ஆனந்த ராகம் சீரியலும், 9-வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் இருக்கிறது.

Also Read: டிஆர்பி இல்லாததால் அதிரடியாக ஊத்தி மூடப்படும் விஜய் டிவி சீரியல்.. 1300 எபிசோடை கடந்த சீரியலாச்சே!

8-வது இடத்தில், இல்லத்தரசியாக இருந்து கொண்டு சொந்தமாக கேட்டரிங் வைத்திருக்கும் பாக்கியா எப்படி எல்லாம் எக்ஸ்பிரஷன் கோபி மூலமும் ராதிகா மூலமும் வரும் பிரச்சனையை சமாளிக்கிறார் என்பதை காண்பிக்கும் பாக்கியலட்சுமி சீரியல் பெற்றுள்ளது. 7-வது இடம் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் உறவை அழகாக காண்பிக்கும் Mr. மனைவி சீரியலும், 6-வது இடத்தில் செம போல்ட் ஆக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் இனியாவிற்கு கிடைத்துள்ளது.

5-வது இடம் பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டாலும் தற்போது கணவர் மனைவியாக தங்களது வாழ்க்கையை துவங்கி இருக்கும் மீனா முத்துவை பற்றி காண்பிக்கும் சிறகடிக்க ஆசை என்ற விஜய் டிவி சீரியல் பெற்றுள்ளது. 4-வது இடம் சன் டிவியின் வானத்தைப்போல சீரியலுக்கும், 3-வது இடம் கலெக்டராக மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் சுந்தரிக்கும் கிடைத்திருக்கிறது.

Also Read: மீனாவின் வெறுப்பை சம்பாதித்த கதிர்.. நிலைகுலைந்து போன பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

2-வது இடம், சாதாரண குடும்பத்தில் இருக்கும் கயல் தன்னை சுற்றி எழும் பிரச்சனைகளை எவ்வளவு போல்டாக சமாளிக்கிறார் என்பதை காண்பிக்கும் கயல் சீரியல் பெற்றுள்ளது. முதல் இடத்தை வழக்கம் போல் எதிர்நீச்சல் தான் பிடித்துள்ளது

இந்த சீரியலின் ஹைலைட்டாக இருக்கும் கேரக்டர் தான் ஆதி குணசேகரன் இந்த கேரக்டரில் நடித்த மாரிமுத்து சமீபத்தில் மரணம் அடைந்ததால், அவருக்கு பதில் யாரை போட வேண்டும் என இப்போது சன் டிவி மண்டையை பிச்சுகிட்டு இருக்கிறது. இந்த கேப்பில் சீரியலில் அவர் எங்கோ சென்று விட்டார் என்று காண்பித்து அவரது பெயரையும் குரலையும் வைத்தே ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கின்றனர். இதனால் தொடர்ந்து டிஆர்பி-யில் எதிர்நீச்சல் முதலிடத்தை ஆக்கிரமித்துள்ளது.

Also Read: மொத்தமாக பட்ட நாமம் போட பார்த்த ரவீந்தர்.. மன உளைச்சலில் போன் நம்பரை மாற்றிய மகாலட்சுமி