புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பேசியே கொள்வான், இந்த குணசேகரன் கொன்னுட்டு தான் பேசுவான்.. அப்பத்தாவுடன் தோற்றுப் போகும் மருமகள்கள்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் வந்ததும் அவருடைய வேலையை ஆரம்பித்து விட்டார். அதாவது மாமியார் சொன்னதற்காக வரப்போகும் குணசேகரனை ஆரத்தி எடுத்து வரவேற்க வேண்டும் என்று மருமகள்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது வந்த குணசேகரனை பார்த்த விசாலாட்சி நான் பெத்த மகனே இத்தனை நாளா என்னை விட்டுட்டு எங்க போன என பாசத்தை கொட்டுகிறார்.

அடுத்ததாக மறுமகள்களை வந்து ஆரத்தி எடுக்க சொல்கிறார். உடனே நந்தினி, ரேணுகா மற்றும் ஈஸ்வரி அனைவரும் சேர்ந்து குணசேகரனை ஆர்த்தி எடுக்க போகிறார்கள். அதற்கு குணசேகரன் எதுவுமே வாய் திறந்து சொல்லாமல் போதும் என்று சைகை கொடுத்து ஒரு டெரர் பார்வையை கொடுத்தார். அத்துடன் இவர்கள் யாருடைய  உறவும் வேண்டாம் என்று அறிவுறுத்தும் வகையில் அனைவரையும் தலைமுழுகிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தார்.

Also read: ஒத்தப்பன் சுடலை உக்கிரமா வந்திருக்கான்.. கலகலப்பான நடிப்பு இல்லாமல் திணறும் எதிர்நீச்சல்

அதன் பிறகு வழக்கம் போல் தம்பிகளிடம் பாசத்தை கொட்டி பேசினார். அத்துடன் வீட்டுக்கு வந்தும் விருந்தாளிகளை மட்டு மரியாதை இல்லாமல் பேசி வெளியே அனுப்பி விட்டார். அப்பொழுது ஈஸ்வரி அப்பாவும் தன்னுடைய மானத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக நாங்களும் கிளம்புகிறோம் என்று குணசேகரனிடம் சொன்னார்.

அதற்கு அவர் நீங்க இருந்து சாப்பிட்டு போங்க உங்க மகளை எந்த லட்சணத்துல வளர்த்து இருக்கீங்கன்னு பாக்கணும் இல்ல என்று நக்கலாக குத்தி காட்டி பேசுகிறார். இதற்கிடையில் இவர் ஒவ்வொருவரையும் பார்க்கும் பார்வையிலேயே அனைவரையும் பஸ்பமாக்கும் அளவிற்கு மொத்த கோபத்தையும் கண்ணில் காட்டினார்.

Also read: வில்லத்தனத்தில் கதிகலங்க வைத்த ஆதி குணசேகரன்.. மொத்தமாக மாறிய கேரக்டர், திசை மாறும் எதிர்நீச்சல்

இதனைத் தொடர்ந்து அப்பத்தா ரொம்ப நாளைக்கு பிறகு தற்போது வீட்டுக்குள் வருகிறார். வந்ததும் வழக்கம் போல் இவருடைய பேச்சை ஆரம்பித்து குணசேகருக்கு சரியான பதிலடி கொடுப்பார். ஆனால் இதற்கெல்லாம் அசராமல் அப்பத்தாவை தோற்கடிக்கும் விதமாக குணசேகரன் டபுள் மடங்கு வில்லத்தனத்தை காட்டப் போகிறார். இதனால் அப்பத்தா மற்றும் மற்ற மருமகள்களும் இந்த ஆதி குணசேகரன் இடம் மறுபடியும் தோற்று நிக்கப் போகிறார்கள்.

அத்துடன் ஜீவானந்தத்தின் மனைவி கயல்விழியை கொன்னது குணசேகரன் என்ற உண்மை கௌதமிற்கு தெரிந்ததால் இவரை பழிவாங்க அவர் இன்னொரு பக்கம் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இவர்களுடைய ஜம்பம் எல்லாம் புது குணசேகரனிடம் பலிக்காது. இதற்கிடையில் விசாலாட்சியின் அண்ணன் ஈஸ்வரியை பார்த்து பழைய குணசேகரன் பேசியே கொள்வான், ஆனால் இப்ப வந்திருக்க குணசேகரன் கொன்னுட்டு தான் பேசவே செய்வான். அதனால எல்லாரும் ஜாக்கிரதையா இருக்கணும் என்று எச்சரிக்கை கொடுத்திருக்கிறார்.

Also read: மரண மாஸ் என்ட்ரி கொடுத்த ஆதி குணசேகரன்.. அடுத்த சம்பவத்துக்கு தயாரான எதிர்நீச்சல்

- Advertisement -

Trending News