கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி தொடர்ந்து.. சினிமாவிற்கு என்ட்ரி கொடுக்கும் 4ம் தலைமுறை!

அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் கருணாநிதி, கருணாநிதியின் மகன் ஸ்டாலின், கருணாநிதியின் பேரன் உதயநிதி ஸ்டாலின் என சினிமாவில் தங்களது பங்களிப்பை கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் இவர்களைத் தொடர்ந்து அடுத்த வாரிசு சினிமாவில் வருவதற்கு ஆயத்தமாகிறது.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக மக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், மறுபக்கம் கிருத்திகா உதயநிதி இயக்குனராக தொடர்ந்து படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார். கிருத்திகா உதயநிதி, கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர் சிவா, பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வணக்கம் சென்னை படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதன் பிறகு விஜய் ஆண்டனி நடித்த காளி படத்தை இயக்கினார். இப்படித் தொடர்ந்து படங்களை இயக்கிக் கொண்டிருக்கும் கிருத்திகா பாலிவுட் படங்களை இயக்கியுள்ளார். தற்போது காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகியுள்ள பேப்பர் ராக்கெட் வெப்சீரிஸை இயக்கியுள்ளார். அந்த வெப்சீரிஸ்  விரைவில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் கீர்த்திகா உதயநிதி மகன் இன்பநிதி கால்பந்தாட்ட விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் இவர் கால்பந்தாட்டம் ஆடிய வீடியோ கூட சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. தற்போது இன்பநிதி சினிமாவின் மீது ஆர்வம் கொண்டுள்ளார்.

சமீபத்தில் கீர்த்திகா உதயநிதி பத்திரிக்கையாளர் பேட்டியில். தனது மகன் இன்பநிதி காலை நான்கு மணிக்கெல்லாம் திரையரங்குகளில் படம் போடுவாங்களா என கேட்டான் போடுவார்கள் என கூறினேன். அதைக் கேட்டு விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தை நேரில் சென்று பார்த்து வந்தான்.

மேலும் இன்பநிதி என்னிடம் வந்து நான் வேணா சினிமாவில் நடிக்க முடியுமா? எனக் கேட்டார், ‘அது ஒன்றும் சாதாரண விஷயம் கிடையாது. முதலில் படியுங்கள், பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என கூறியதாக கூறி உள்ளார். எனவே இன்பநிதிக்கு சினிமாவில் ஆர்வம் ஏற்பட்டிருப்பதால் கூடிய விரைவில் படிப்பை முடித்துவிட்டு கருணாநிதி அவர்களின் நான்காவது வாரிசாக சினிமாவில் என்ட்ரி கொடுக்க போகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்