கைதி படத்தினால் கார்த்திக்கு வந்த ஆப்பு.. குடும்பத்தில் குட்டைய கிளப்பிய மனைவி

தற்போது திரையரங்கில் வசூலில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரமான வந்தியதேவன் கேரக்டரில் நடிகர் கார்த்தி கச்சிதமாக பொருந்தி நடித்திருக்கிறார். இதனால் பலரது தரப்பிலிருந்து இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றது.

இதுமட்டுமின்றி கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் சர்தார் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆனது. இதில் கார்த்தி ரகசிய உளவாளியாக சுமார் ஆறு தோற்றங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். தற்போது கார்த்தியின் மார்க்கெட் சினிமாவில் வேற லெவல் எதிரி கொண்டிருக்கும்.

Also Read: நம்ம வந்தியதேவனா இது? No.1 ட்ரெண்டிங்கில், 6 கெட்டப்பில் மிரட்டும் கார்த்தியின் சர்தார் பட டீசர்

இந்த சூழலில் அவருடைய மனைவி அவருக்கு கேட் போட்டுக் கொண்டிருக்கிறார். அதாவது சிவக்குமார் குடும்பம் எந்தவித சர்ச்சையிலும் சிக்காமல் சிறந்த கூட்டுக் குடும்பம் என்ற பெயரை வாங்கி உள்ளது .ஆனால் சினிமாவைப்பொறுத்தவரை கார்த்தி காதல் படங்களில் நடிப்பது அவருடைய மனைவிக்கு வருத்தம் அளிக்கிறது.

கார்த்தியின் மனைவி சென்னையில் படித்திருந்தாலும் அவர் வளர்ந்ததெல்லாம் கிராமத்தில்தான். அந்தக் காலத்தில் கதாநாயகன்கள் எல்லாம் கதாநாயகிகளை தொடாமலே நடிக்க முடிந்தது. ஆனால் இப்போது வெளியாகும் படங்களில் எல்லாம் நடிகர் நடிகைகளை தொட்டு நடிப்பது மிக சாதாரணமாகிவிட்டது.

Also Read: பொன்னியின் செல்வன் 2ம் பாகத்திற்கு வெறித்தனமாக காக்க வைத்திருக்கும் மணிரத்தினம்.. செம ட்விஸ்ட்

இப்படிப்பட்ட மனநிலையில் இருக்கும் மனைவியிடம் திட்டு வாங்க முடியாது என்பதற்காகவே அவருடைய படத்தில் காதல் பாடல் வந்தால் அவரை கண்ணை மூடிக்கொள் என்று கார்த்தி சொல்வாராம். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த கைதி படத்தை பார்த்தோமானால் அதில் ரொமான்ஸ்க்கு சுத்தமாகவே இடமில்லை.

அப்படியும் அந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதே போன்ற படங்களில் தேர்வு செய்து நடிங்கள். அதுதான் உங்களுக்கு பொருந்தும் என்றும் சொல்கிறாராம். ஆனால் கார்த்தி நடிப்பில் இதுவரை வெளியான பெரும்பாலான படங்களில் ஹீரோயினுடன் சேர்ந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடிக்கும்.

Also Read: கைதி 2 ரகசியத்தை போட்டு உடைத்த கார்த்தி.. உச்சகட்ட கடுப்பில் லோகேஷ்

அந்த அளவிற்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆன கார்த்திக்கு செக் வைத்திருக்கிறார் அவருடைய மனைவி. ஆனால் கார்த்தி தன்னுடைய மனைவியிடம் சினிமா வாழ்க்கை வேறு, குடும்ப வாழ்க்கை வேறு புரிய வைக்கப் பார்க்கிறார்.

Next Story

- Advertisement -