சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

தப்புக்கு மேல் தப்பு பண்ணும் கண்ணன்.. பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு பிடித்திருக்கும் ஏழரை

Pandian Stores Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணன் தம்பிகள் என்னதான் நல்லவர்களாக இருந்தாலும் குடும்பத்தில் ஒரு கரும்புள்ளி இருக்கும் என்று சொல்வார்களே அது தான் கண்ணன். ஆரம்பத்தில் விளையாட்டுத்தனமாக நிறைய விஷயங்களை செய்தாலும் தற்போது இவரால் குடும்பமே அவமானப்பட போகிறது.

அதாவது தனியாக சென்று எல்லாத்தையும் நான் பார்த்துப்பேன் என்ற திமிரில் ஐஸ்வர்யா கூப்பிட்டவுடன் தனி குடித்தனம் போனார். ஆனால் வரவுக்கு மீறி அதிக ஆடம்பரமான செலவு செய்து கடனை இழுத்து வைத்தது தான் மிச்சம். ஒரு வழியாக இந்த பிரச்சனை எல்லாம் சரி செய்து குடும்பத்தில் வந்த பிறகாவது திருந்துவார் என்று எதிர்பார்த்தோம்.

Also read: எந்த நாய்க்கும் பதில் சொல்ல தேவையில்லை.. ஆவேசமாக பொங்கி எழும் குணசேகரன்

ஆனால் ஏற்கனவே வாங்கிய கடனை குடும்பத்திடம் சொல்லாமல் மறைத்து விட்டு அதை எப்படி அடைப்பது என்று திண்டாடி வருகிறார். இந்த சூழலில் கண்ணன் வேலை பார்க்கும் இடத்தில் லஞ்சம் கொடுத்து இவரிடம் கையெழுத்து வாங்கும் நிலைமை வருகிறது. ஆரம்பத்தில் வேண்டாம் என்று வாயால் சொன்னாலும் மனதிற்குள் இந்த பணம் தேவைப்படுகிறது என்ற எண்ணத்தால் வாங்கி விடுகிறார். அதை வைத்து வாங்கிய கடனுக்கு வட்டியை அடைக்கிறார்.

சரி இதோடு முடிந்து போனது இனிமேலாவது ஒழுங்காக இருப்பார் என்று பார்த்தால் ருசி கண்ட பூனை சும்மா விடுமா? அது போல தான் இவர் ஒரு முறை லஞ்சம் வாங்கியதால் அதனுடைய ருசி பிடித்து விட்டது. தற்போது மறுபடியும் கட்டு கட்டாக லஞ்சத்தை வாங்குகிறார். இவருக்கு விருப்பமில்லை என்றாலும் பணத்தை பார்த்ததும் கமுக்கமாக வைத்துக் கொள்கிறார்.

Also read: ஒரே மாசத்துல 18 லட்சமா.? உருட்டுறதுக்கும் ஒரு அளவில்லையா பாக்கியா

அந்த நேரத்தில் மேனேஜர் வந்து விடுகிறார். இந்த மேனேஜர் ஏற்கனவே ஒரு முறை லஞ்சம் வாங்கி இருக்கிறார். அப்பொழுது இந்த கண்ணன் பையன் தான் போலீஸிடம் புகார் கொடுத்து இவரை ஜெயிலுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இப்பொழுது இந்த விஷயம் தெரிந்தால் சும்மா விடுவாரா? இதுதான் நல்ல சான்ஸ் என்று கண்ணனுக்கு ஆப்பு வைக்கப் போகிறார்.

இந்த விஷயம் மட்டும் வெளியில் தெரிந்தால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மொத்தமும் அவமானப்பட நேரிடும். ஏற்கனவே தனத்துக்கு வந்த நெஞ்சுவலி பிரச்சனை போதாது என்ற நிலையில் இந்த கண்ணனால் வரப் போகின்ற ஏழரையை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்பதை பார்க்கலாம். இதற்கு பேசாம பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற பெயருக்கு பதிலாக பிரச்சனையான குடும்பம் என்று வைத்திருக்கலாம்.

Also read: தாலி சென்டிமென்ட் வைத்து உருட்டும் விஜய் டிவி.. புரட்சி செய்யும் எதிர்நீச்சல்

- Advertisement -

Trending News