திங்கட்கிழமை, டிசம்பர் 2, 2024

ஒரே மாசத்துல 18 லட்சமா.? உருட்டுறதுக்கும் ஒரு அளவில்லையா பாக்கியா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி தொடரில் என்னதான் நடக்கிறது. சீரியலாக இருந்தாலும் கொஞ்சம் கூட நியாயம் வேண்டாமா? லாஜிக்கே இல்லாமல் கதை நகர்ந்து வருகிறது. அதாவது கோபியிடம் ஒரு மாதத்திற்குள் உங்களுக்கு சேர வேண்டிய 18 லட்சத்தையும் கொடுத்தால் இந்த வீட்டை விட்டு நீங்களும் ராதிகாவும் போக வேண்டும் என்று சவால் விடுகிறார்.

இவர் சவால் விடுவது என்னமோ ஓகே தான். ஆனால் ஒரு மாதத்திற்குள் அதுவும் சமையல் ஆர்டர் மூலம் 18 லட்சம் சம்பாதிக்க முடியும் என்று சொல்வது தான் ரொம்பவே இடிக்குது. எப்படி இருந்தாலும் பாக்கியா அந்த 18 லட்ச ரூபாயை கொடுத்து கோபி மற்றும் ராதிகாவை வெளியே அனுப்பி அசிங்கப்படுத்த போகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது.

Also read: குணசேகரன் உருவானது எப்படி.? எதிர்நீச்சல் ஷாக்கிங் சீக்ரெட்டை உடைத்த திருச்செல்வம்

அதற்காக பாக்கியா,பழனிச்சாமியை பார்க்கப் போகிறார். அங்கே பழனிச்சாமியை பார்த்து அந்த சமையல் ஆர்டரை வாங்கி கொடுங்கள் நான் ரெடி பண்ணி விடுகிறேன் என்று கூறுகிறார். பிறகு வீட்டில் வந்து கோபியின் அம்மாவிடம் மூன்று நாளைக்கு 5000 பேருக்கு சமையல் ஆர்டரை எடுத்து இருக்கிறேன்.

அதை வைத்து உங்க பிள்ளையிடம் எப்படியும் பணத்தை கொடுத்து விடுவேன் என்று சொல்கிறார். இதை கேட்ட கோபியின் அம்மா வாயை பிளந்து 5000 பேர்க்கு எப்படி முடியும் என்று கேட்க, அதற்கு பாக்கியா முதலில் நானும் முடியாதான்னு நினைத்தேன், ஆனால் நான் சமாளித்து செய்து முடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கூறுகிறார்.

Also read: துணிச்சலாக தூக்கி எறிந்த கரிகாலனின் தாலி.. குணசேகரனை விட சொர்ணா அக்காவாக மாறிய ஆதிரை

உடனே கோபியின் அப்பா எங்களுக்காக உன்னை ரொம்பவும் வருத்திக்க வேண்டாம் என்று சொல்கிறார். அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல மாமா, இந்த ஆர்டர் மட்டும் நான் நல்லபடியாக முடித்து விட்டால் இந்த வீடு நம்ம வீடாக மாறிவிடும் என்று பூரிப்பாக சொல்லுகிறார்.

இது எல்லாம் ஓகே தான் ஆனாலும் ஒரு மாசத்துல 18 லட்சம் சம்பாதிக்க முடியுமா? உருட்டுறதுக்கு ஒரு அளவே இல்லையா பாக்கியா. பேசாம எல்லாரும் சமையலை கத்துக்கிட்டு கேட்டரிங் வேலையே பார்க்கலாம் போல. ஒருவேளை பாக்கியாவுக்கு சுக்கிரன் உச்சத்துல இருக்கானோ என்னவோ?

Also read: அஜித்தால் தான் தன்னுடைய கேரியரே போச்சு.. பரபரப்பாக பேட்டியளித்த எதிர்நீச்சல் பிரபலம்

- Advertisement -spot_img

Trending News