திருப்தி அடையாமல் சூர்யா எடுத்த அதிரடி முடிவு.. வேண்டவே வேண்டாம் என்று சிவாவுக்கு போட்ட ஆர்டர்

Kanguva’s release date changes depending on its VFX work: தமிழ் சினிமாவில் சிறுத்தை படத்தின் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் இயக்குனர் சிவா மசாலா படங்களே ஆனாலும் தனக்குரிய பாணியில் காமெடி, சென்டிமென்ட் இவற்றை தூக்கலாக காண்பித்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாற்றி மாபெரும் வெற்றி பெற்று விடுவது இவரது தந்திரம். 

அஜித்தின் ஃபேவரைட் இயக்குனராக வீரம், வேதாளம், விசுவாசம் போன்ற  குடும்பங்கள் கொண்டாடும் படங்களின் மூலம் வெற்றி கண்ட சிறுத்தை சிவா தற்போது சூர்யாவை வைத்து கங்குவாவை ரெடி பண்ணி உள்ளார்.

இதுவரை கையாளாத முற்றிலும் மாறுபட்ட ஜானரில் சரித்திர கதையை பின்புலமாகக் கொண்டு இரண்டு பாகங்களாக, சூர்யா பத்து வேடங்களில் தோன்ற 38 மொழிகளில் பிரம்மாண்ட வகையில் காட்சிப்படுத்தி வேற லெவல்ல மிரட்டி இருக்கிறார் சிறுத்தை சிவா. 

கே இ ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல், கோவை சரளா போன்ற பல முன்னணி நட்சத்திரங்களும்  கங்குவாவில் இணைந்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையோடு வெளிவந்த  ஃபர்ஸ்ட் லுக்கில் “ஒரு 100 புலி நகமும் மார் நிறைய!” என்கிற தோற்றதோடு வந்து, “நலமா!” என்று மிரட்டி விட்டுப் போனார் கங்கா என்கிற கங்குவா முற்றிலும் தமிழ் பெயராக தமிழின வேட்கையை அதிகரிக்கும் வகையில் அமைந்தது கங்குவாவின்  ஃபர்ஸ்ட் லுக்.

Also read: ‘கங்குவா’ டைரக்டருக்கு சூர்யா போட்ட கிடக்கு பிடி.. படத்து மேல ஹீரோவுக்கே நம்பிக்கை இல்லனா எப்படி?

பர்ஸ்ட் லுக்கை பார்த்து மிரண்டு போயிருந்த ரசிகர்கள் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ஆவலுடன் காத்திருக்கும் வேளையில் படத்தின் 90% படப்பிடிப்புகள்  வேலைகள் நிறைவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. டப்பிங்கின் போது கங்குவாவை பார்த்த சூர்யா, சிவாவை கட்டியணைத்து வெகுவாக பாராட்டினாராம். 

படம் சிறந்த முறையில் வந்து உள்ளதாக கூறியவர், ஒரு சில விஎஃப்எக்ஸ் காட்சிகள் மட்டும் சரிவர அமையாததால் திருப்தி ஏற்படவில்லை என்றுள்ளார். இதனால் விஎஃப்எக்ஸ் காட்சிகளை மாற்றி அவற்றை மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்து சரிவர செய்ய சொல்லி கட்டளை இட்டு உள்ளாராம்.

காட்சிகளை மாற்றாமல் ரிலீஸ் செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டதாக தகவல். இதனால் கோடை விடுமுறையை ஒட்டி ஏப்ரல் 11 வெளியாக இருந்த கங்குவாவின் ரிலீஸ் தள்ளி போகுமா என்ற கேள்வி தொடர்ந்துள்ளது. இதைப்பற்றி கூறிய பிரபல தயாரிப்பாளரான தனஞ்செயன் சரித்திர பின்னணி கொண்ட சண்டை காட்சிகள் அதிகமாக இருப்பதால் விஎஃப்எக்ஸ்  வேலைகள் திருப்தி தந்தால் மட்டுமே ரிலீஸ் தேதியை லாக் செய்வோம் என்று கூறியுள்ளார்.

Also read:கங்குவா உதிரனாக மாறிய பாபி தியோல்.. சூர்யாவிற்கே டஃப் கொடுக்கும் அசுரத்தனமாக போஸ்டர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்