முதல் முறை ஒரு நடிகனாக கமல் வாங்கிய சம்பளம்.. 35 நாட்களுக்கு இவ்வளவுதானா? இயக்குனருடன் போட்ட சண்டை

தமிழ் சினிமாவில் 1960 ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கமலஹாசன் இத்திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற தேசிய விருதையும் பெற்றார். அதன்பின் ஹீரோவாக அறிமுகமாகி 80களில் சிறந்த கதாநாயகனாக வலம் வந்து தற்போது வரை ரசிகர்களுக்குப் பிடித்த நடிகராக உருவாக்கியுள்ளார்.

கமலஹாசன் என்று சொன்னவுடனே அவரது நடிப்பையும் தாண்டி, அதேபோல் அவரின் தற்போதைய சம்பளம் எவ்வளவு என்று நமக்கு நன்றாக தெரியும், அப்படிப்பட்ட கமலஹாசன் தனது முதல் திரைப்படத்திற்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறைவு என பிரபல இயக்குனரிடம் வருத்தப்பட்டு கூறிய நிகழ்வு அண்மையில் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Also Read : ஒரு தலைமுறையையே நாசமாக்கிய ரஜினி.. எல்லாத்துக்கும் பிள்ளையார் சுழி போட்ட பாலச்சந்தர்

1973ஆம் ஆண்டு கமல்ஹாசன் ஹீரோவாக அறிமுகமான அரங்கேற்றம் திரைப்படத்தை, இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் இயக்கினார். இத்திரைப்படத்தில் பெண்களை மையமாக வைத்து கதை நகரும் வகையில் இருந்த நிலையில், கமலஹாசனுக்கு முக்கியமான கதாப்பாத்திரம் கொடுக்கப்பட்டதால் இத்திரைப்படம் மிகப்பெரிய உயரத்தை அவருக்கு கொடுத்தது.

இதற்குப் பின்பே கமலஹாசன் தொடர்ந்து பாலச்சந்தர் இயக்கத்தில் பல திரைப்படங்களில் நடித்தார். இதனிடையே அரங்கேற்றம் படத்தில் நடித்துக்கொண்டிருந்த கமலஹாசன், பாலச்சந்தர் சொன்னதை விட ஆயிரம் மடங்கு அவரது நடிப்புத் திறமையை நன்றாகவே வெளிப்படுத்தினாராம். இதில் பூரிப்படைந்த பாலச்சந்தர் கமலஹாசனுக்கு 500 ரூபாய் சம்பளமாக கொடுத்துள்ளாராம்.

Also Read : ரஜினி செய்த பெரிய தவறு.. செருப்பால் அடிப்பேன் என்று சொன்ன பாலச்சந்தர்

இதை பார்த்து திருதிருவென முழித்த கமலஹாசன், அரங்கேற்றம் படத்திற்காக நான் பல நாட்கள் வந்து நடித்து உள்ளேன். எனக்கு வெறும் 500 ரூபாய்தான் சம்பளம் கொடுக்கிறீர்கள் என்று வருத்தத்துடன் கேட்டாராம். உடனே அதற்கு பதிலளித்த பாலச்சந்தர் உனக்கு இருக்கும் திறமைக்கு, நீ ஆயிரம் அல்ல, லட்சம் அல்ல, கோடிக்கணக்கில் சம்பளங்களை வாங்கி பல சொத்துக்களையும், புகழையும் குவிப்பாய் என அன்றே கமலஹாசனை ஆசீர்வதித்தாராம் பாலச்சந்தர்.

அவர் ஆசீர்வதித்ததைப் போலவே கமலஹாசன் இன்று உலகநாயகனாக வலம் வந்து ஒரு படத்திற்கு 100 கோடி மேல் சம்பளமாக வாங்கி வருகிறார். அன்று கமலஹாசன் தனக்கு கிடைத்த 500 ரூபாய் வருமானத்தை மட்டும் பெரிதாக பார்த்திருந்தால், இன்று அவர் ஒரு நடிகராக கூட வந்திருக்க முடியாது. ஆனால் பாலச்சந்தர் கூறிய வார்த்தையே கமலுக்கு கோடிக்கணக்கில் சம்பாதித்த இன்பத்தை கொடுத்ததால் தான் இன்றைக்கு உலக நாயகனாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : நாகேஷை தூக்கி எறிந்த பாலச்சந்தர்.. எம் ஜி ஆரால் பிரிந்து போன நட்பு

Next Story

- Advertisement -