ஓவர் கெடுபிடி காட்டும் கமல்.. மணிரத்தினமே இருந்தாலும் உலகநாயகன் கொடுக்கும் டார்ச்சர்

தனக்குள் இருக்கும் பல திறமைகளை வெளிக்காட்டி, தமிழ் சினிமாவில் மாபெரும் இடத்தைப் பிடித்தவர் கமலஹாசன். அவ்வாறு இருப்பின் தற்பொழுது மணிரத்னத்திற்கும் இவர் கெடுபிடி காட்டும் செய்தி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

35 வருடத்திற்கு பிறகு இணைய இருக்கும் கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணி. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாக இருக்கும் படம் தான் கே ஹெச் 234. இப்படத்தை ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

Also Read: வீரன் படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு இப்படி ஒரு அநீதியா.. செய்தியாளர்களுக்கு கொடுத்த செம டோஸ்

இந்நிலையில் உலக நாயகன் அவர்களுக்கு சினிமாவில் அனுபவம் ஜாஸ்தி என்பதால் அவரின் கருத்தை இப்படத்தில் முன்வைத்து வருவார் என்பது நிச்சயம். கதையை இப்படி மாற்றுங்கள், அப்படி மாற்றங்கள் என தனக்கு தெரிந்த வித்தைகளை சொல்லிக் கொண்டே தான் இருப்பார்.

படத்தின் கதையை பொறுத்தவரை யாருக்கும் எந்த ஒரு பாரபட்சமும் காட்ட மாட்டார். அது எப்பேர்ப்பட்ட பெரிய இயக்குனராக இருந்தாலும் நிச்சயமாக கதையில் தன் கருத்தை கொண்டு தலையிடுவார் கமல். இயக்குனர் சொல்லும் கருத்துக்கு மாற்று கருத்து கூறுபவர் தான் நம் உலக நாயகன்.

Also Read: புரட்சிப் பெண் ஜோதிகாவை வலைவீசி தேடும் நெட்டிசன்கள்.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!

இதைக் கொண்டு மணிரத்தினம் இப்படத்தை எவ்வாறு கொண்டு செல்லப் போகிறார் என்பது தெரியவில்லை. மேலும் ஏற்கனவே இரண்டு பேரும் நாயகன் படத்தில் கூட்டணி போட்டவர்கள். மாபெரும் ஹிட் கொடுத்த அப்படம் கமலுக்கு இன்று வரை பெயர் சொல்லும் படமாக அமைந்து வருகிறது.

அப்படத்தின் மூலம் இவர்கள் இருவரும் ஒரு புரிதலை மேற்கொண்டு இருப்பார்கள். அதனைக் கொண்டு கமல் கண்டிப்பாக இப்படத்தில் மணிரத்னத்திற்கு டிப்ஸ் கொடுப்பார். ஆகையால் நிச்சயமாக இவர்கள் கூட்டணியில் உருவாகும் படம் என்றால், அதில் கமலின் ஐடியா கண்டிப்பாக இடம் பெற்றே தீரும் என்பது உறுதியான ஒன்று.

Also Read: ஜாதி பேசுபவர்களுக்கு சாட்டையடி கொடுத்த மூர்க்கன்.. மீண்டும் மீண்டும் கேட்க தோணும் 5 வசனங்கள்