கமல் மண்டையில் அடித்த அலாரம்.. 2 இயக்குனர்களையும் கரெக்டா யூஸ் பண்ணும் உலக நாயகன்

Kamal Haasan uses both directors correctly: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த உலக நாயகன் கமலஹாசன் படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி தனித்திறமையுடன் தமிழ் திரை உலகின்  ஜாம்பவானாக வலம் வருகிறார். 

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் தமிழ் சினிமாவில் கோலோச்சிய உலக நாயகன் பெரும்பாலும் தனது தோல்வி படங்களாலேயே அடையாளப்படுத்தப்படுகிறார். 

அவரின் திறமையை காலம் கடந்தே கொண்டாடுகின்றனர் நம் தமிழ் ரசிகர்கள்.

அன்பே சிவம், ஹேராம், குணா, நாயகன் போன்ற படங்கள்  திரைக்கு வந்த புதிதில் கண்டுகொள்ளாதவர்கள் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்குப் பின்பு, படத்தைப் பற்றியும் அவர் நடிப்பை பற்றியும் பேசுவது உலக நாயகனுக்கு மட்டுமே கிடைத்த பெருமை ஆகும்.

கமலால் விரும்பப்படும் இயக்குனர்கள் சங்கர் மற்றும் மணிரத்தினம்

நாயகன் மற்றும் இந்தியன் திரைப்படங்களை இயக்கிய மணிரத்தினம் மற்றும் சங்கர் இருவரையும் இப்போதும் விடாமல் தன் நட்பு வளையத்துக்குள் போற்றி பாதுகாத்து வருகிறார் கமல்.

காரணம் கமலுக்கு மணிரத்தினம் மற்றும் சங்கர் இவர்கள் திறமையின் மீது அபார நம்பிக்கை என்பதே உண்மை.

கலை நயமிக்க படங்கள் பண்ணுவதில் கைதேந்தவரான மணிரத்தினத்தை விடக்கூடாது என்ற முடிவில் வைத்திருக்கிறார் கமல்.

கிட்டத்தட்ட 38  வருடங்கள் கழித்து நாயகன் படத்திற்கு பின் தற்போது தக் லைப்பில் ஒன்றாக இணைந்துள்ளனர் மணிரத்தினம் மற்றும் கமல். 

ரங்க ராய சக்திவேல் நாயக்கன் காயல்பட்டினக்காரன் என்று இழப்பதற்கு எதுவும் இல்லாதவன் செய்யும் போராட்டமாக வருகிறது இந்த தக் லைப்.

அதே போன்று வணிக ரீதியாக பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுடன் தான் சொல்ல வேண்டிய கருத்தை ஆணித்தரமாக சொல்லும் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரை கமல் விடுவதற்கு தயாராக இல்லை.

இந்தியன் முதல் பாகத்திலேயே அவரது அதிகப்படியான செலவு கமலுக்கு சற்று எரிச்சலை ஏற்படுத்தினாலும், வரவு கணிசமாக இருந்ததால் இந்த இயக்குனரை விட்டுக் கொடுக்க முடியவில்லை.

அதே பழைய வேகத்துடன் இந்தியன் 2 மற்றும் 3 யையும் முடித்து கமல் இஸ் பேக் என்று தன்னை நிரூபித்து உள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்