ஒரிஜினல் குணசேகரனை டம்மியாக்கிய ஜீவானந்தம்.. முதல் பேட்டியால் சன் டிவிக்கு ஏற்பட்ட தலைவலி

Ethirneechal- Jeevanadham: சின்னத்திரை பொருத்தவரை மக்களை என்டர்டைன்மென்ட் பண்ணுவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது சீரியல்கள் தான். அந்த வகையில் சன் டிவியில் எத்தனை சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் மறக்கவே முடியாத சில சீரியல்கள் மக்கள் மனதில் இப்பொழுது வரை பதிந்திருக்கிறது. அந்த இடத்தில் சமீபத்தில் முடிந்து போன எதிர்நீச்சல் சீரியலும் இடம் பிடித்து விட்டது.

அதற்கு காரணம் பெண்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக கதைகள் இருந்தாலும் அதில் நடித்த கதாபாத்திரங்களின் நடிப்பை மறக்க முடியாத அளவிற்கு தனித்துவம் பெற்றுவிட்டது. படித்த நான்கு மருமகள் ஆசை கனவுகளை சுமந்து கொண்டு புகுந்த வீட்டிற்கு அடி எடுத்துப் போகிறார்கள். ஆனால் அங்கே போனதும் நாம் நினைத்தபடி எதுவும் நடக்காமல் எல்லாம் தலைகீழாக மாறி மாய பிம்பமாக போய்விட்டது.

ஆனாலும் வேறு வழி இல்லாமல் இதுதான் தலையெழுத்து என்று முடங்கிக் கிடக்கும் பெண்களின் தன்னம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து அவர்கள் எப்படி முன்னேறுகிறார்கள் அவர்களுடைய கனவுகளை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்பதை வைத்து கதை பிரமாதமாக வந்தது. அதிலும் இவர்களை எல்லாம் தாண்டி நெகட்டிவ் கேரக்டிலும் வில்லன் கதாபாத்திரத்திலும் வெளுத்து வாங்கிய குணசேகரன் என்கிற மாரிமுத்து நடிப்பு அனைவரையும் கவர்ந்து விட்டது.

ஜீவானந்தம் கொடுத்த பேட்டி

ஒரு வில்லனின் நடிப்பை இந்த அளவுக்கு ரசித்துப் பார்க்க முடியுமா? இந்த அளவுக்கு அவருக்கு ரசிகர்கள் கிடைக்குமா என்பதை எல்லாம் உடைத்து குணசேகரனை தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவிற்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் வர ஆரம்பித்து விட்டார்கள். அதனால்யே இவருக்காக நாடகம் பார்க்க வேண்டும் என்று ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து பார்க்க ஆரம்பித்தார்கள்.

அப்படிப்பட்டவர் மறைவிற்குப் பின் நாடகம் தடுமாறிய நிலையில் அவருக்கு பதிலாக வேலராமமூர்த்தி நுழைந்தார். ஆரம்பத்தில் இவரை ஏற்றுக் கொள்வது கடினமாக இருந்தாலும் கதை நன்றாக இருந்தால் ஆதரவு நிச்சயம் என்பதற்கு ஏற்ப ஒவ்வொரு நாளும் போனது. ஆனால் மாரிமுத்து கதைக்கு எதிர்மறையாக ஒரு முரட்டு வில்லனாகவும், கொடூர புத்தியைக் கொண்ட வக்கிர வார்த்தைகளை பயன்படுத்திய வேலராமமூர்த்திக்கு தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்கள் வந்தது.

இதனால் எதிர்நீச்சல் சீரியலை பார்த்தால் பிபி, பிரஷர், மன அழுத்தம் எல்லாம் ஒன்று கூடி ஒரு நிம்மதியை தொலைக்கக் கூடிய அளவிற்கு கதை அமைந்ததாக மக்கள் அவர்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தார்கள். ஆனாலும் கதையில் எந்தவித மாற்றமும் இல்லாததால் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நாடகத்தை பார்ப்பதை நிறுத்திக் கொண்டே வந்தார்கள். இதனால் டிஆர்பி ரேட்டிங்கில் அடிபட்டுவிட்டது.

அந்த வகையில் சன் டிவி சேனல் தயாரிப்பில் இருந்து பிரேம் டைமில் இப்படி ஒரு சரிவை ஏற்படுத்தும் அளவிற்கு கதை இருந்தால் அந்த நாடகம் எங்களுக்கு தேவையில்லை என்பதற்கு ஏற்ற மாதிரி பேச ஆரம்பித்து விட்டார்கள். அதனால் இந்த நாடகத்தை எடுத்த ஜீவானந்தம் என்பவர் உடனடியாக கிளைமாக்ஸ் காட்சியை கொண்டு வந்து விட்டார்.

இதற்கு முக்கிய காரணம் குணசேகரன் கதாபாத்திரம் பில்லர் ஆக அமைந்தது. கடைசில அவர் இல்லாமல் வேலராமமூர்த்தி முரட்டுத்தனமாக நடித்தது தான் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். இன்னும் சொல்ல போனால் சமீபத்தில் பேட்டி அளித்த அப்பத்தா முதல் கொண்டு குணசேகரன் இல்லாததால் தான் நாடகம் தடம் புரண்டு விட்டது என்று கூறினார்.

ஆனால் நேற்று முதன் முறையாக ஜீவானந்தம் அளித்த பேட்டியில், நாடகம் டிஆர்பி ரேட்டிங்கில் அடிவாங்கியதற்கும் வேலராமமூர்த்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் மாரிமுத்து நடித்ததை விட வேலராமமூர்த்தி நடிக்க ஆரம்பித்த பிறகு தான் டிஆர்பி ரேட்டிங் எங்களுக்கு அதிகரித்தது. அந்த அளவிற்கு வேல ராமமூர்த்தி அவருடைய கதாபாத்திரத்தை நச்சுன்னு தான் கொடுத்தார்.

ஆனால் மக்கள் ஓவர் எதிர்பார்ப்பை வைத்து அதன் படி கதை இல்லை என்று புலம்ப ஆரம்பித்ததால் கொஞ்சம் எங்களுக்கு குடைச்சல் வர ஆரம்பித்தது. இதனால் தான் நாடகம் முடித்தேனே தவிர வேறு எந்த காரணமும் இல்லை என்று கூறியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த நாடகம் ஆரம்பத்தில் இருந்து நன்றாக போனதற்கு கதை மட்டும் தான் காரணம்.

குணசேகரன் கதாபாத்திரத்தில் யார் நடித்திருந்தாலும் நிச்சயம் என்னுடைய கதை டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்திருக்கும் என்று ஜீவானந்தம் அவர் செய்த தவறை ஒத்துக் கொள்ளாமல் வேலராமமூர்த்தி தூக்கி பிடித்து மனசாட்சியே இல்லாமல் பேட்டி அளித்திருக்கிறார். இதனை தொடர்ந்து இன்னும் சில சந்தர்ப்பங்களுக்கு காத்துக்கொண்டிருப்பதாகவும், எல்லாம் கைக்கொடி வந்தால் எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் வரும் என்றும் கூறியிருக்கிறார்.

எதிர்நீச்சல் சீரியலில் முடிந்த எபிசோடுகள்

Next Story

- Advertisement -