எதிர்நீச்சல் – வாய்ப்பில்லாமல் திண்டாடும் குணசேகரன்.. தன் தலையிலே மண்ண வாரி போட்ட வேல ராமமூர்த்தி

Ethirneechal: என்னதான் திறமையும் விடாமுயற்சியும் இருந்தாலும், அதிர்ஷ்டம் இல்லை என்றால் எல்லாம் தலைகீழாக மாறிவிடும் என்று சொல்வார்கள். இதற்கு உதாரணமாக எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டரில் நடித்த வேலராமமூர்த்தி சொல்லலாம். இவருடைய நடிப்புக்கும் திறமைக்கும் எந்தவித குறையும் சொல்ல முடியாத அளவிற்கு தத்ரூபமாக நடித்திருக்கிறார்.

அதிலும் பார்க்க முரடனாகவும், ஒரு வில்லன் இப்படித்தான் இருப்பார் என்று பயப்படும் அளவிற்கு முகபாவனையும் பேச்சையும் கொடுத்து எதிர்நீச்சல் சீரியலில் நடித்தார். ஆனால் அதிர்ஷ்டம் இவருக்கு கை கொடுக்கவில்லை என்றே சொல்லலாம். ஏனென்றால் இவர் நடித்த கதாபாத்திரம் பெரிசாக மக்களிடம் எடுபடவில்லை.

வாய்ப்பில்லாமல் திண்டாடும் குணசேகரன்

அதற்கு முக்கிய காரணம் இவருக்கு முன்னால் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து நடிப்பை பார்த்த பின்பு இவருடைய வில்லத்தனமான கொடூரமான பேச்சைக் கேட்க முடியாததால் பலரும் வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள். அதனாலையே கொஞ்சம் கொஞ்சமாக நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் பின்னடைவை சந்தித்தது.

கடைசியில் நாடகத்தை க்ளோஸ் பண்ணும் அளவிற்கு கிளைமாக்ஸை அவசர அவசரமாக கொண்டு வந்து முடித்து விட்டார்கள். இப்படி இவர் என்னதான் டெடிகேஷன் ஆக நடித்து வந்தாலும் இவரிடம் இல்லாத அதிர்ஷ்டம் நாடகத்தின் மூலம் கெட்ட பெயரை சம்பாதிக்கும் அளவிற்கு விட்டுவிட்டது. சரி இதனைத் தொடர்ந்து அடுத்து வெள்ளித் துறையில் கிடைக்கும் படம் வாய்ப்புகள் மூலம் மறுபடியும் தொடர்ந்து நடிக்கலாம் என்று எதிர்பார்த்தார்.

ஆனால் இவருக்கு நெகடிவ் விமர்சனங்கள் இருப்பதாலும், எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் பொழுது வெள்ளித் திரையில் இருந்து வந்த வாய்ப்புகளை நிராகரித்ததாலும் தற்போது எந்த ஒரு வாய்ப்பும் இல்லாமல் திண்டாடும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. இதை தான் சொல்வார்கள் யானை தன் தலையிலே மண்ணை வாரி போட்டுக் கொள்ளும் என்று.

அதுபோல குணசேகரன் கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடித்ததால் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. இதற்கு முன் வருடத்திற்கு அஞ்சு ஆறு படங்கள் என கமிட் ஆகி நடித்து வந்த இவருக்கு தற்போது ஒரு வாய்ப்பும் இல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் அளவிற்கு நிலைமை போய்விட்டது. இதனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தட்டு தடுமாறிக் கொண்டு பார்ப்பவர்களிடம் வாய்ப்பு கேட்டு அலைகிறார்.

எதிர்நீச்சல் குணசேகரன்

Next Story

- Advertisement -