Ethirneechal Serial: பெண்களின் நம்பிக்கையை தூண்டிவிட்டு அவர்கள் நினைத்தால் என்ன வேணாலும் சாதிக்க முடியும் எப்பொழுது வேண்டுமானாலும் வெற்றியை பார்க்கலாம் என்ற தன்னம்பிக்கையை கொடுத்தது எதிர்நீச்சல் சீரியல்தான். சீரியல் ஆக இருந்தாலும் அதில் உள்ள கதைகள் பார்க்கும் போது பலருடைய உணர்வுகளை தூண்டி விடும் அளவிற்கு காட்சிகள் இருந்தது.
அதனால் தான் இந்த நாடகத்திற்கு தொடர்ந்து ஆதரவுகள் கொடுத்து கணவர்கள் முதற்கொண்டு பார்த்து வந்தார்கள். அதுவும் ஆணாதிக்கம் பிடித்த நபர்களுக்கு இந்த நாடகம் ஒரு சாட்டை அடியாக இருந்தது. அதிலும் படித்த பெண்களை வீட்டு அடுப்பாங்கறையில் போட்டு வேலைக்காரியாக நடத்தும் குணசேகரன் போல் கேரக்டர் எல்லா இடத்திலும் எங்கு பார்த்தாலும் இருக்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களை எந்த மாதிரி டீல் பண்ணி அவர்கள் முன்னாடி ஜெயிக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப கதை நகர்ந்து வந்தது. இதில் மாட்டிக் கொண்டு முழித்த ரேணுகா, ஈஸ்வரி, நந்தினி மற்றும் ஜனனி என்கிற கதாபாத்திரம் பொறுத்தார் பூமி ஆழ்வார் என்று சொல்வதற்கு ஏற்ப பொறுமையாக இருந்து கொண்டு அவர்களுடைய இலட்சியத்தை அடைவதற்கு வழி வகுத்து வந்தார்கள்.
இப்படி முடங்கி கிடக்கும் பெண்களுக்கு ஒரு சப்போர்ட்டாக இந்த நாடகத்தின் கதை அமைந்தது. அந்த வகையில் கணவரிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் மனைவிகள், கணவர் துணை இல்லாமல் தன்னந்தனியாக இருக்கும் பெண்கள் ஒவ்வொருவரும் லட்சத்தை நோக்கி வெற்றி பெற வேண்டும் என்று காட்டும் விதமாக கதை அமைந்தது.
கனவை நினைவாக்கிய நந்தினி என்கிற ஹரிப்ரியா
அந்த வகையில் இந்த நாடகத்தில் நடித்து வந்த நந்தினி என்கிற ஹரிப்ரியா நிஜ வாழ்க்கையிலும் கணவரிடம் ஏற்பட்ட மனக்கசப்பினால் கல்யாண வாழ்க்கை வேண்டாம் என்று விவாகரத்து பண்ணி தன்னந்தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த சூழலில் அவருக்கு ஜீவானந்தம் கொடுத்த சப்போர்ட் மற்றும் ஊக்குவித்தலின்படி தற்போது புது பிசினத்தை தொடங்கி இருக்கிறார்.
அதாவது ஹரிப்பிரியாவிற்கு ஏற்கனவே நடனம் எல்லாம் அத்துபடி. ஆனால் அதை எப்படி எதற்கு பயன்படுத்த வேண்டும் என்று யோசித்து நிலையில் எதிர்நீச்சல் சீரியல் முடிந்த பிறகு அவர் மனதிற்கு ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது. அதனால் நிஜத்தில் முன்னேற வேண்டும் என்பதற்காக ‘காளிகல்பா’ என்ற புதிய நடனப்பள்ளி ஒன்றை தொடங்கி இருக்கிறார்.
இதன்மூலம் நடனம் கற்றுக்க ஆர்வமுள்ளவர்கள் எங்கு இருந்தாலும் கற்றுக்கொள்ளலாம் என்பதற்கு ஏற்ப ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் நடன வகுப்பு நடத்தப் போகிறார். இதன் மூலம் இவருடைய நீண்ட நாள் கனவை நிஜமாக்கிய சந்தோசத்தில் ஹரிப்பிரியா இந்த புது பிசினஸை துவங்கி இருக்கிறார். இவர் எடுத்து வைக்கும் பாதைக்கு மக்கள் அனைவரும் இதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.
இனி இவரைப் போல திறமையை வைத்துக் கொண்டு முடங்கி கிடக்கும் பெண்கள் ஒவ்வொருவரும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து முன்னேற வேண்டும் என்பதுதான் இந்த நாடகத்தின் முக்கிய கதையாக கருதப்படுகிறது.
எதிர்நீச்சல் சீரியலின் சுவாரசியமான சம்பவங்கள்
- குணசேகரன் மாட்டிக் கொண்டு முழிக்கும் தருணம்
- குணசேகரனை ஆட்டிப்படைக்க போகும் அப்பத்தா, எஸ் கே ஆர்
- Gunasekaran: ரேணுகா மனக்கஷ்டத்தை போக்கிய சர்வாதிகாரி