புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

4 மருமகளை காப்பாற்ற வந்த ஜீவானந்தம்.. தர்ஷினி விஷயத்துக்கு எண்டு கார்டு போடப் போகும் எதிர்நீச்சல்

Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், தர்ஷினியை யார் கடத்திட்டு போயிருக்கிறார் என்ற ஒரு விஷயம் பலரையும் குழப்பத்தில் வைத்திருக்கிறது. பணத்துக்காக கடத்திட்டு போயிருந்தால் இந்நேரத்துக்கு போன் பண்ணி டிமாண்ட் பண்ணி இருப்பார்கள். அப்படி இருக்கும் பொழுது குணசேகரனுக்கு எதிராக யாரோ ஒருவர் அவரை பழி வாங்குவதற்காக தான் தர்ஷினியை கடத்திட்டு போய் இருப்பது போல் தெரிகிறது.

இதற்கு இடையில் ஜனனி குடும்பத்தை காலி பண்ண ராமசாமி மற்றும் கிருஷ்ணசாமி பல வழிகளில் முயற்சி எடுத்து வருகிறார்கள். அதனால் ஒருவேளை அவர்களுடைய சதி வேலையாக கூட இருக்கலாம். இந்த சூழலையில் குணசேகரன் வீட்டில் உள்ள நான்கு மருமகள் தர்ஷினியை கண்டுபிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் போராடி வருகிறார்கள்.

இவர்களுக்கு சப்போர்ட்டாக இருந்த சக்திக்கு அடிபட்டதால் தற்போது அவராலும் எந்த உதவியும் பண்ண முடியவில்லை. அத்துடன் சக்தியை பார்த்துக் கொள்வதற்காக ஆதிரையை வரவழைத்து இருக்கிறார்கள். இதனை அடுத்து ஜனனி, ஈஸ்வரி, ரேணுகா மற்றும் நந்தினி அனைவரும் கிளம்பி போய் விட்டார்கள். போகும் வழியில் ரவுடி கும்பலால் இவர்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்படுகிறது.

Also read: முத்துவின் பாசத்தை அலட்சியப்படுத்தும் விஜயா.. பேராசையால் மருமகளை தூக்கி வைத்துக் கொண்டாடும் மாமி

அதை எதிர்த்துப் போராடி வரும் நிலையில் காரில் இருந்து ஒரு நபர் இறங்கி வருகிறார். கண்டிப்பாக இன்னொரு புது நபரை யாரும் கொண்டு வரப் போறது இல்லை. அதனால் ஜீவானந்தம் தான் என்டரி கொடுக்கிறார். ஃபர்கான மூலம் அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொண்டு தர்ஷினியை கண்டுபிடிப்பதற்காக களத்தில் இறங்குகிறார் ஜீவானந்தம்.

இனி குணசேகரன் வீட்டு நான்கு மருமகளுடன் சேர்ந்து ஜீவானந்தம் தர்ஷினியை கண்டுபிடிக்க போகிறார். அதற்கு ஏற்ற மாதிரி தர்ஷினியும் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதை ஒரு பேப்பர் மூலம் எழுதி வெளியே தூக்கி வீசி இருக்கிறார். அத்துடன் மெடிக்கல் ஷாப்புக்கு ஒரு மருந்து வாங்கும் சீட்டிலும் அவரை கிட்னாப் பண்ணி இருப்பதாக எழுதி இருக்கிறார்.

ஆக மொத்தத்தில் தர்ஷினி கொடுத்த குழுவை வைத்து இனி அனைவரும் தேட போகிறார்கள். அந்த வகையில் இன்னும் ஓரிரு நாட்களில் தர்ஷினி கடத்தினது யார் என்று கண்டுபிடித்து பாதுகாப்பாக அவரை வீட்டிற்கு கூட்டி வந்து விடுவார்கள். இதற்கு இடையில் ஆங்காங்கே மிச்சமுள்ள பழைய கதைகளை மறுபடியும் கொண்டு வந்தால் இன்னும் சுவாரசியமாக இருக்கும்.

Also read: தர்ஷினியை காப்பாற்ற களத்தில் இறங்கும் ஜீவானந்தம்.. முதல் அடி ராமசாமி, கிருஷ்ணசாமிக்கு தான்

- Advertisement -

Trending News