ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

குணசேகரனின் தம்பி கதையை முடித்த ஜனனியின் தோழர்.. அப்பத்தா, ஜீவானந்தம் செய்யப் போகும் தரமான சம்பவம்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் கடந்த சில மாதங்களாக எதிர்பார்த்த அளவிற்கு சுவாரஸ்யமாக இல்லாமல் டல் அடித்தது. ஆனால் அதை எல்லாம் மாற்றும் விதமாக தற்போது கதிர் சிக்கியதை பார்க்கும் பொழுது விறுவிறுப்பாக இருக்கிறது. அதாவது திருவிழாவில் ஜீவானந்தத்தை கொலை செய்ய வேண்டும் என்று பிளான் பண்ணி வளவனை கூட்டிட்டு போகிறார்.

போகும் போதே கதிர் பெண் ஆசையால் கௌதமிடம் சிக்கிக்கொண்டார். அதாவது இவரை எதை வைத்து மடக்கலாம் என்று பிளான் பண்ணி கௌதம் இருக்கும் இடத்திற்கு கதிரை வரவைத்து விட்டார். இதெல்லாம் தெரியாமல் கதிரும் பெண் பின்னாடியே பல்ல இளிச்சுட்டு போனார். ஆனால் போனதுமே எலி வலையில் மாட்டிக் கொண்டு சிக்கியபடி கௌதமிடம் மாட்டிக் கொண்டார்.

அத்துடன் கதிரை எந்த அளவிற்கு வெளுத்து வாங்கணுமோ அதை தரமாக செய்துவிட்டார். ஆக மொத்தத்தில் இதோடு கதிர் உடைய ஆட்டம் குறைந்து விடவும் வாய்ப்பு இருக்கிறது. அந்த அளவிற்கு கதிர் கௌதமிடம் மரண அடி வாங்குகிறார். இந்த காட்சிதான் தற்போது சுவாரசியமாக இருக்கிறது. காரணம் ஜீவானந்தத்தின் மனைவி கயல்விழி இறப்பிற்கு முழுக்க முழுக்க காரணம் இவர்தான்.

அந்த வகையில் கதிருக்கு சரியான தண்டனை இதுதான். அடுத்தபடியாக நீ என்னிடம் சிக்கிக் கொண்ட மாதிரி குணசேகரனை என்னுடைய தோழர் ஜீவானந்தம் பார்த்துக் கொள்வார் என்று கௌதம் சொல்கிறார். அப்படி என்றால் ஜீவானந்தம் குணசேகரனுக்கு ஏதோ ஒரு ஏற்பாடு பண்ணி இருக்கிறார் என்பது போல் தெரிகிறது.

இதற்கு அடுத்து கிராமத்திற்கு வந்த குணசேகரன் அங்கேயும் போய் ருத்ர தாண்டவம் ஆடுகிறார். அதாவது ஈஸ்வரியையும் ஜீவானந்தத்தையும் சேர்த்து வைத்து தவறாக பேசுகிறார். இதை பார்த்து பொறுக்க முடியாத தர்ஷன் அப்பாவை எதிர்த்து கேள்வி கேட்கிறார். அதற்கு கொம்பேறி மூக்கனாக தன் மகன் என்று கூட பார்க்காமல் கன்னத்தில் அடித்து விடுகிறார்.

இதை பார்த்ததும் அங்கு இருப்பவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உரைந்து போய் நிற்கிறார்கள். ஆனால் அப்பத்தா மட்டும் ஆறுதலாக பேசி இது அனைத்திற்கும் இன்னும் இரண்டு நாட்களில் முடிவு கட்டி விடுகிறேன் என்று சொல்கிறார். ஆக மொத்தத்தில் குணசேகரன் ஆட்டத்தை க்ளோஸ் பண்ண அப்பத்தா மற்றும் ஜீவானந்தம் ஏதோ தரமான சம்பவத்தை செய்ய போகிறார்கள் என்பது போல் தெரிகிறது.

- Advertisement -spot_img

Trending News