இப்பவும் 900 தியேட்டர்களில் வெற்றியை கொண்டாடும் ஜெயிலர்.. ஆன விக்ரம் படம் ஓட அருண் விஜய்க்கு ஆடர் போட்ட கமல்

Actor rajini and Kamal: நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் படம் தாறுமாறான வெற்றியை பார்த்து வருகிறது. படம் ரிலீஸ் ஆகி ரெண்டு வாரத்திற்கு மேலாகியும் மவுஸ் குறையாமல் ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள். மேலும் இப்படத்தை ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து மக்களும் பார்த்தே ஆக வேண்டும் என்று திரையரங்குகளுக்கு சென்று பார்க்கிறார்கள்.

அதனாலேயே இப்ப வரை கிட்டத்தட்ட 900 தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு வருகிறது. மேலும் வசூல் அளவிலும் அதிக லாபத்தை பார்த்து விட்டது. ரஜினி படம் என்றால் சும்மாவா, எல்லா பக்கமும் அதிர வேண்டும் என்பதற்கு ஏற்ப அனைத்து இடங்களிலும் கொண்டாடி வருகிறார்கள். இது அத்தனையும் தலைவர் ரஜினி ஒருவருக்காக மட்டுமே என்பது தான் உண்மை.

Also read: ரஜினியை அடிக்க தயங்கிய மூத்த நடிகர்.. தைரியம் கொடுத்து அடி வாங்கிய சூப்பர்ஸ்டார்

அந்த அளவிற்கு எல்லோருடைய மனதிலும் ரஜினி எட்டாத உயரத்தில் குடி புகுந்து விட்டார். அதே நேரத்தில் இவருக்கு இணையாக உலகநாயகன் கமலஹாசன் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருந்தாலும் ரஜினியை விட ஒரு படி கீழே தான் என்று சொல்லும் அளவிற்கு தான் இருக்கிறார். அதற்கு உதாரணமாக கடந்த வருடம் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடித்து வெளியாகி வந்த விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இருந்தாலும் இவருடைய படம் ஜூன் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. ஆனால் அதே நேரத்தில் வேறு எந்த நடிகர்கள் படத்தையும் ரிலீஸ் ஆக விடாமல் ஒரு வேலையை செய்திருக்கிறார் என்றே சொல்லலாம். அதாவது கிட்டத்தட்ட அந்த நேரத்தில் நடிகர் அருண் விஜய் நடித்த யானை படமும் ரிலீஸ் ஆக இருந்தது.

Also read: நேருக்கு நேராக ரஜினி, கமல் மோதி தெறிக்கவிட்ட 5 படங்கள்.. 890 நாட்கள் திரையில் மிரள விட்ட சூப்பர் ஸ்டார்

ஆனால் அப்பொழுது தனிப்பட்ட முறையில் கமல் செய்த ஒரு விஷயம், அருண் விஜய் இடம் இப்போதைக்கு இந்த படத்தை ரிலீஸ் பண்ணாமல் நிறுத்தி வையுங்கள். கொஞ்சம் நாட்கள் கழித்த பின் திரையரங்குகளில் விடலாம் என்று சொல்லி இருக்கிறார்.  இவர் கேட்டுக் கொண்ட படி அருண் விஜய்யும் ஜூன் மாதம் அவருடைய படத்தை ரிலீஸ் செய்யாமல்  ஜூலையில் திரையரங்குகளில் வெளியிட்டு இருக்கிறார்.

அருண் விஜய் படம் ஓரளவுக்கு தான் போகும் என்றாலும், விக்ரம் படத்துடன் எந்த படமும் போட்டியாக வந்து விடக்கூடாது என்ற ஒரு பயம் கமலுக்கு இருந்தது. அதனாலேயே அவர் இந்த மாதிரி ஒரு ஆடரை அருண் விஜய்க்கு போட்டு இருக்கிறார். இதிலிருந்து கமலுக்கும், ரஜினிக்கும் உள்ள நிலைமை என்னவென்று தெரிந்து கொள்ளலாம். ரஜினி சும்மா நடித்தாலே போதும் அந்த படம் டாப்புக்கு போய்விடும். அதற்கு உதாரணம் தான் ஜெயிலர் படம் இரண்டு வாரம் தாண்டியும் இப்ப வரை 900 திரையரங்குகளில் ஓடிக் கொண்டு வருகிறது.

Also read: வணங்கான் சூர்யாவுடன் கூட்டணி போடும் அருண் விஜய்.. தெறிக்கவிடும் லேட்டஸ்ட் அப்டேட்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்