Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu

சைக்கோ தயாரிப்பாளரிடம் சிக்கி சின்னாபின்னமான நடிகை.. தாங்க முடியாமல் தப்பித்து வந்த பரிதாபம்

திரையில் அழகு பதுமையாக இருக்கும் நடிகைகள் பலரும் நிஜ வாழ்க்கையில் சொல்ல முடியாத அளவுக்கு கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள். அதிலும் காதல் என்ற பெயரில் சிலரை நம்பி ஏமாந்த நடிகைகள் இங்கு ஏராளம் உண்டு. அப்படித்தான் பிரபலமான நடிகை ஒருவர் தன்னை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளரை உருகி உருகி காதலித்திருக்கிறார்.

இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே வருட கணக்கில் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் அந்த தயாரிப்பாளருக்கு நடிகையுடனான அந்த வாழ்க்கை புளித்துப் போய் இருக்கிறது. அதன் விளைவாக நடிகை வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு பல சித்திரவதைகளை அனுபவித்திருக்கிறார்.

Also read: 2 மனைவிகளுக்கும் 2வது புருஷனாகவே வாக்கப்பட்ட நடிகர்.. முரட்டு வில்லனின் வாழ்க்கையில் நடந்த கொடுமை

அந்த சைக்கோ தயாரிப்பாளர் நடிகையை அடித்து துன்புறுத்தியதோடு மட்டுமல்லாமல் அந்தரங்க இடங்களிலும் அவரை கடித்து சித்திரவதை செய்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் சூடு வைப்பது போன்ற பல வில்லத்தனங்களை செய்து மிருகமாக நடந்திருக்கிறார். மேலும் அவர் நடிகையை திரைப்படங்களில் நடிக்க கூடாது என்றும் மற்ற நடிகர்களுடன் பழகக் கூடாது என்றும் கூறி கொடுமைப்படுத்தி இருக்கிறார்.

இப்படி நாளுக்கு நாள் அவரின் அட்டகாசம் அதிகரித்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் நடிகையை அவர் வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்ல முடியாதபடி அடைத்து வைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த வேதனையை தாங்க முடியாத நடிகை எப்படியோ அவரிடம் இருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என தன் வீட்டிற்கு ஓடி வந்திருக்கிறார்.

இப்போது தன் பெற்றோருடன் இருக்கும் அந்த நடிகை தயாரிப்பாளரை பற்றிய பல விஷயங்களை மீடியா முன் அம்பலப்படுத்தி வருகிறார். மேலும் எந்த நடிகையும் அவரை நம்ப வேண்டாம் என்றும் சினிமா துறையே ரொம்பவும் மோசமானது என்றும் அட்வைஸ் செய்து வருகிறார். நடிகையின் தற்போதைய நிலைமையை பற்றி தான் திரையுலகில் ஒரே பேச்சாக இருக்கிறது.

Also read: அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு ஓகே சொன்னதால் நைட்டு புரட்டி எடுத்த நடிகர்.. நடக்க முடியாமல் சூட்டிங் வந்த கொடுமை

Continue Reading
To Top