புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

லைக்காவுக்கு போட்டியாக இறங்கிய ஐசரி கணேஷ்.. வரிசை கட்டி நிற்கும் 7 முக்கிய படங்கள்

பெரிய நிறுவனங்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் அதிக முதலீடு செய்து வருகிறார்கள். காரணம் டாப் ஹீரோக்களின் படங்கள் பெரிய பட்ஜெட்டில் எடுத்தாலும் அதை இரட்டிப்பாக வசூல் செய்து விடுகிறது. அந்த வகையில் லைக்கா தமிழ் சினிமாவில் ஆயிரம் கோடிக்கு அதிகமாக முதலீடு செய்துள்ளது.

இந்தியன் 2, சந்திரமுகி 2, பொன்னியின் செல்வன் 2 போன்ற படங்களை லைக்கா தயாரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஞானவேல், ரஜினி இணையும் படம் மற்றும் ஏகே 62 படமும் லைக்கா லைன் அப்பில் உள்ளது. இந்நிலையில் லைக்காவுக்கு போட்டியாக பிரபல நிறுவனம் பல படங்களை தயாரிக்கிறது.

Also Read : துணிவு கொடுத்த தைரியம், கண்டிஷன் போட்ட அஜித்.. அவசர ஆலோசனையில் லைக்கா

அதாவது வேல்ஸ் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் இப்போது பல கோடி முதலீட்டில் படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை தயாரித்திருந்தார். மேலும் ஆர்.ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் படத்தையும் இந்நிறுவனம் தான் தயாரித்துள்ளது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் பிக் பாஸ் வருண் நடிப்பில் உருவாகி வரும் ஜோசாவா இமைப்போல் காக்க படத்தையும் ஐசரி தயாரித்து வருகிறார். இதைத்தொடர்ந்து மிர்ச்சி சிவா நடிக்கும் சுமோ, பிட்டி சார் படங்களை சிறு பட்ஜெட்டில் வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.

Also Read : தயாரிப்பு நிறுவனங்களை ஓட விடும் லைக்கா.. 1000 கோடி பட்ஜெட்டுக்கு மேல் கைவசம் இருக்கும் 6 பிரம்மாண்ட படங்கள்

மேலும் கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த கொரோனா குமார் படத்தை ஐசரி கணேசஷ் தான் தயாரிப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் இப்போது சிம்புக்கு பதிலாக வேறு ஒரு கதாநாயகனை தேர்வு செய்ய உள்ளார்களாம். இந்த படங்களை தொடர்ந்து பிரம்மாண்ட படம் ஒன்றை இந்நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

அதாவது ஜெயம் ரவி, ஏ ஆர் ரகுமான் கூட்டணியில் உருவாக உள்ள படத்தை 100 கோடி பட்ஜெட் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் இயக்கவிருக்கிறார். பிரம்மாண்டமாக உருவாக உள்ள இந்த படத்தின் அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து பா விஜய் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் ஒரு படம் உருவாக இருக்கிறது. இவ்வாறு வேல்ஸ் நிறுவனம் கைவசம் ஏழு படங்கள் உள்ளது.

Also Read : கதை கேட்காமலேயே ஓகே சொல்லும் ஜெயம் ரவி.. உண்மை தெரியாமல் ஊர் சுற்றுவதால் நடந்த விபரீதம்

- Advertisement -

Trending News