புதன்கிழமை, நவம்பர் 13, 2024

நாட்டாமை பட டீச்சரா இது.. இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் தான் நாட்டாமை. சரத்குமார், குஷ்பூ, தேவயானி, விஜயகுமார் மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் ரசிகர்கள் மனதில் தற்போது வரை இடம் பிடித்திருப்பவர் நாட்டாமை பட டீச்சர்.

இந்த படத்தில் அவருடைய கவர்ச்சி மற்றும் அவருக்கான பிஜிஎம் வேற லெவலில் வொர்க் அவுட் ஆனது. இந்நிலையில் டீச்சரின் நிஜ பெயர் ராணி. இவர் கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் நடிப்பில் வெளியான வில்லுப்பாட்டுக்காரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானார்.

Also Read : 2 திருமணம் செய்து விவாகரத்தான சரத்குமார்.. பொன்னியின் செல்வன் 2 விழாவில் பார்த்திபனுக்கு நடந்த அவமானம்

அதன் பிறகு பல படங்களில் நடித்து வந்த ராணி ஜெமினி படத்தில் இடம்பெற்ற ஓ போடு என்ற பாடலில் குத்தாட்டம் போட்டிருப்பார். தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் ராணி கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை கிரங்கடித்து உள்ளார். அவர் இப்போது எப்படி இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கும்.

இந்த சூழலில் அவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை திக்கு முக்காட செய்துள்ளது. அப்போது பார்த்தது போலவே இப்போதும் நடிகை இருக்கிறார். மேலும் பட வாய்ப்பு இல்லாமல் சினிமாவை விட்டு சில காலம் விலகி இருந்த ராணி தற்போது சீரியலில் களம் இறங்கி உள்ளார்.

Also Read : 5 ரூபாய்க்கு கூட வழியில்லாமல் நடுரோட்டில் நின்ற சரத்குமார்.. காரணம் கேட்டா அதிர்ச்சி ஆயிடுவீங்க!

அதாவது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் என்ற தொடரில் நடிக்கிறார். மேலும் ராணிக்கு திறமையான நடிப்பு மற்றும் நடனத் திறமை இருந்தாலும் கவர்ச்சி நடிகை என முத்திரை குத்தப்பட்டதால் அவரால் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் சீரியல் பக்கம் வந்து விட்டார்.

நாட்டாமை பட டீச்சர்

nattamai-teacher-rani

Also Read : நீலாம்பரியாக நடிக்க இருந்த 2 கதாநாயகிகள்.. கேஎஸ் ரவிக்குமார் உடைத்த படையப்பா சீக்ரெட்

- Advertisement -spot_img

Trending News