புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

என்னோட கல்யாணத்தை நிறுத்திட்டேன்.. அதிர்ச்சி கொடுத்த யூடியூபர் இர்பான்

இன்று இளைஞர்கள் பலரும் படித்து விட்டு வேலைக்குச் செல்வதை காட்டிலும் யூடியூபில் சேனல் ஆரம்பித்து அதில் சம்பாதிக்க வேண்டும் என்ற இடத்தில் இருக்கின்றனர். அந்த வகையில் இன்றைய தேதிக்கு தமிழ்நாட்டில் ஏகப்பட்ட யூடியூப் சேனல் களை வைத்து தனி நபர்கள் பலர் பிரபலமாகி வருகின்றன.

அதில் சாப்பாட்டை மையமாக வைத்து இர்பான் வியூ என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்தவர் இர்பான். மேலும் அதிகமாக சம்பாதிக்கும் யூடியூப் சேனல் வைத்திருப்பவர்கள் இவர் மிக முக்கியமானவர். இவரை வைத்து பல ஹோட்டல் நிறுவனங்கள் தங்களுடைய ஹோட்டலை பிரபலப்படுத்த இவருக்கு பணம் கொடுத்து அந்த ஹோட்டலை விளம்பரப்படுத்தி தரச் சொல்வார்கள்.

இவரும் சும்மா ஒன்றும் முன்னுக்கு வரவில்லை. மக்களுக்குப் புதிய புதிய உணவு வகைகளை காட்ட வேண்டும் என நாடு நாடாகச் சென்று வித்தியாச வித்தியாசமான உணவுகளை ரசிகர்களுக்கு காட்டி இவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதன்பிறகு அவரது திருமணம் பற்றி எந்த தகவலும் இல்லை. இருந்தாலும் ரசிகர்கள் அவருடைய யூடியூப் பக்கத்தில் தொடர்ந்து உங்களுக்கு திருமணம் எப்போது என கமெண்ட் செய்து வந்தனர். ஆனால் தன்னுடைய திருமணத்தை தான் நிறுத்தி விட்டதாக அதிர்ச்சி அளிக்கும் பதிலை கொடுப்பார் என யாருமே எதிர்பார்க்கவில்லை.

குடும்பத்தினர் விருப்பப்படி பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட அந்த திருமணத்தில் எனக்கும் அந்த கல்யாணம் செய்யவிருந்த பெண்ணுக்கும் செட்டாகவில்லை எனவும் இருவருக்கும் புரியவில்லை என்பதால் இந்த கல்யாணத்தை நிறுத்திவிட்டதாகவும் இர்பான் தெரிவித்துள்ளார்.

இது அவருடைய தனிப்பட்ட விருப்பமாக இருந்தாலும் பல ரசிகர்கள் கமெண்ட்டுகள் பணம் காசு வந்து விட்டால் என்ன வேண்டுமானாலும் செய்வதா என அவருக்கு நெகட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும் அவருடைய முடிவை மதித்து தானே ஆக வேண்டும்.

- Advertisement -

Trending News