புதன்கிழமை, பிப்ரவரி 19, 2025

உங்க வளர்ப்பு, பார்வை சரியில்லை.. கல்யாண சர்ச்சையால் பொங்கி எழுந்த பிகில் பாண்டியம்மா!

Indraja Shankar: ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் சில வாரங்களுக்கு முன்பு கோலாகலமாக நடந்து முடிந்தது. ஒட்டு மொத்த பிரபலங்களும் இதில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

ஊரே மெச்சும் படி நடந்த அந்த திருமணத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் சில சர்ச்சைகளும் எழுந்தது. ரொம்ப ஆட்டம் போடுறாங்க, ஓவரா இருக்கு போன்ற கமெண்ட்டுகளும் பறந்தது.

அதைத் தாண்டி இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு உதட்டில் முத்தம் கொடுத்தது பெரிய அளவில் வைரலானது. என்னதான் அப்பாவாக இருந்தாலும் வளர்ந்த பிறகு ஒரு எல்லை வேண்டாமா என பலரும் கேட்டனர்.

இந்திரஜா கொடுத்த பதிலடி

அதற்கு தற்போது பதில் அளித்துள்ள இந்திரஜா சிறு வயதிலிருந்தே என் அப்பாவுக்கு நான் இப்படித்தான் முத்தம் கொடுப்பேன். இதுல என்ன தப்பு இருக்கு.

இத தப்பா பாக்குறவங்க கண்ணுல தான் பிரச்சனை. உங்க பார்வையில் தான் தப்பு. உங்களை வளர்த்தவங்க சரியில்ல என பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் இதனால் என்னை தப்பானவளாக பார்க்க வேண்டாம். என்னை என் அப்பா சரியாகத்தான் வளர்த்திருக்கிறார் என பொங்கி எழுந்துள்ளார். இதன் மூலம் வாய்க்கு வந்ததை பேசும் நெட்டிசன்களின் வாயை அவர் அடைத்துள்ளார்.

Trending News