முத்துவிடம் இருந்து பிரவுன் மணியை காப்பாற்றும் ரோகிணியின் தோழி.. மொத்தமாக சொதப்பிய மீனா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி எப்பொழுது கையும் களவுமாக மாட்டப் போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறோம். ஆனால் கதை முடியும் பொழுது தான் இந்த ரோகிணி பற்றிய விஷயம் வெளிவரும் என்று சொல்வதற்கு ஏற்ப கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு முறையும் ரோகினி எஸ்கேப் ஆகிக்கொண்டு வருகிறார்.

அப்படித்தான் இப்பொழுது மீனா பூ டெலிவரி செய்து கொண்டிருக்கும் பொழுது ரோகிணியின் மாமாவாக நடிக்க வந்த பிரவுன் மணியை பார்த்து விடுகிறார். பிறகு பிரவுன் மணியும் மீனாவை பார்த்ததும் தப்பித்து போய்விடுகிறார். பின்னாடியே மீனா பிரௌன் மணியை பார்ப்பதற்கு போகிறார். ஆனால் அதற்குள்ளே அவர் தப்பித்து விட்டார்.

அசால்டாக கோட்டை விட்ட மீனா

இதனை அடுத்து ரோகிணி மனோஜ் ஆரம்பித்து இருக்கும் ஷோரூம் கடைக்கு ரோகிணியின் தோழி பூஜை பண்ணுவதற்காக சாமி போட்டோவை கொண்டு வருகிறார். அப்பொழுது அங்கே வைத்த பொழுது இதற்கு தினமும் பூ வேண்டும் என்று மனோஜ் சொல்கிறார். அதற்கு ரோகிணி, மீனாவிடம் போன் பண்ணி கேட்டால் நேராக கடைக்கு கொண்டு வந்து விடுவார் என்று சொல்லி மீனாவுக்கு போன் பண்ணி பூ கேட்கிறார்.

மீனாவும் பூ கொண்டு வந்து கொண்டிருக்கிறார். இதற்கு இடையில் முத்துவின் நண்பர் வீட்டுக்கு பிரிட்ஜ் வேண்டும் என்று சொல்லிய நிலையில் முத்து, மனோஜ் கடைக்கு வாங்குவதற்கு கூட்டிட்டு போயிருக்கிறார். அந்த நேரத்தில் பிரவுன் மணி ரோகிணியின் கடைக்குள் நுழைந்து விட்டார். இதை பார்த்த ரோகினையின் தோழி முத்து கண்ணில் பட்டுவிடக் கூடாது என்பதற்காக பிரவுன்மணியே அங்கு இருக்கும் ஒரு பிரிட்ஜ்குள் அடைத்து விடுகிறார்.

இதனை தொடர்ந்து மீனாவும் அந்த கடைக்கு வந்து பூ கொடுத்து விடுகிறார். அடுத்து மீனா, முத்து மற்றும் முத்துவின் நண்பர் அனைவரும் சேர்ந்து மனோஜ் கடையில் பிரிட்ஜ் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது எதேர்ச்சியாக பிரவுன் மணியை அடைத்து வைத்திருக்கும் பிரிட்ஜ் தான் திறக்கப் போகிறார். ஆனால் அதை திறக்க விடாமல் ரோகினின் தோழி தடுத்து சமாளித்து விடுகிறார்.

ஆக மொத்தத்தில் பிரவுன் மணி அவர்களிடம் சிக்காமல் தப்பித்துக் கொள்கிறார். வழக்கம் போல ரோகிணியும் மாட்டாமல் எஸ்கேப் ஆகிவிட்டார். இந்த மீனாவும் பிரவுன்மணியே கண்டுபிடிக்காமல் தொலைத்து விட்டு சொதப்பிவிட்டார். இதனை அடுத்தாவது ரோகிணி மீது முத்துவுக்கு சந்தேகம் வந்து அதை கண்டுபிடிக்கும் விதமாக கதை நகர்ந்தால் இன்னும் சுவாரசியமாக இருக்கும்.

சிறகடிக்கும் சீரியலின் முந்தைய சம்பவங்கள்

Next Story

- Advertisement -