இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார்.. அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் ஒட்டுமொத்த திரையுலகம்

Illaiyaraja Daughter Bavadharani: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், யுவன் சங்கர் ராஜாவின் சகோதரி மற்றும் பின்னணி பாடகியுமான பவதாரணி உடல்நிலை குறைவு காரணமாக இன்று மாலை 5.20 மணிக்கு உயிரிழந்திருக்கிறார். சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் பல பாடல்களை பாடி பிரபலமானவர்.

இவர் முக்கால்வாசி பாடிய பாடல்கள் அனைத்துமே இளையராஜா மற்றும் சகோதரர்கள் இசை அமைத்த படங்களில் மட்டுமே பாடி இருக்கிறார். அந்த வகையில் ராசையா படத்தில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். இவர் பாடிய பாடல்களில் மிகவும் பிரபலமான பாடலான “மயில் போல பொண்ணு ஒண்ணு” இந்த பாடலுக்காக சிறந்த பெண் பின்னணி தேசிய விருதை பெற்றார்.

அத்துடன் அழகு படத்தில் இவர் பாடிய “ஒளியிலே தெரிவது தேவதையா” என்ற பாடலை பாடி மிகவும் பிரபலப்படுத்திய பெருமை இவரை சாரும். இவருடைய குரல் தனித்துவமாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். இவருக்கு தற்போது 47 வயதாகிறது. இவர் சபரிராஜ் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். அப்படிப்பட்ட இவர் புற்றுநோய் காரணமாக கடந்த பல மாதங்களாக சிகிச்சை எடுத்திருக்கிறார்.

Also read: இளையராஜாவிடம் பாடுவதற்கு மறுத்த யேசுதாஸ்.. மனதை உருக்கும் அந்தப் பாடல்!

இந்த நிலையில், ஆயுர்வேத சிகிச்சைக்காக சமீபத்தில் இலங்கை சென்று இருக்கிறார். ஆனால் அந்த சிகிச்சை இவருடைய உடம்புக்கு பயனளிக்காத நிலையில் இலங்கைக்கு போன இடத்திலேயே காலமாகிவிட்டார். கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக உடல்நிலை பிரச்சனையில் தவித்திருக்கிறார்.

ஆனால் தற்போது சிகிச்சை பெற்றும் பயனில்லாமல் இன்று மாலை உயிர் இழந்துவிட்டார். இவருடைய உடல் நாளை மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. இவருடைய இறப்பு செய்தியை கேட்ட ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இந்த துயரத்தை போக்குவதற்கு வார்த்தைகளே இல்லை. இருப்பினும் இளையராஜா மற்றும் அவர்களுடைய குடும்பம் இந்த இழப்பிலிருந்து மீண்டு வருவதற்கான தைரியத்தை கடவுள் கொடுக்க வேண்டும்.

Also read: இளையராஜா இல்லாமல் கிடைத்த வெற்றி.. சரித்திரத்தையே மாற்றிய பாக்ஸ் ஆபிஸ் ராஜாக்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்