வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

அப்பத்தாவை ரூமில் அடைத்து கொடுமைப்படுத்தும் குணசேகரன்.. ஜீவானந்தத்திற்கு ஆதரவாக நிற்கும் மருமகள்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தம் கேரக்டர் முதலில் போர் அடிக்கும் விதமாக இருந்தது. ஆனால் எப்பொழுது இவருடைய மனைவி, மகள் என அனைவரையும் காட்டினாரோ அப்பொழுதே சுவாரஸ்யமாக மாறிவிட்டது. இந்நிலையில் அந்த மகிழ்ச்சி இரண்டு நாட்களுக்குள்ளேயே நீடிக்காமல் முடிந்து விடுகிறது.

அதாவது ஜீவானந்தத்திற்கு பதிலாக இவருடைய மனைவி உயிர் பிரிந்து விட்டது. மகள் கண்ணு முன்னாடியே இப்படி ஒரு அசம்பாவிதத்தை செய்த கதிர், தொடர்ந்து ஜீவானந்தத்தையும் குறி வைப்பதற்கு முயற்சி செய்தார். ஆனால் வளவன் இவரை தடுத்து விட்டார். இந்த அளவுக்கு மனசாட்சியே இல்லாமல் கொடூர மிருகமாக இருக்கிறார் கதிர்.

Also read: பாக்கியலட்சுமி கதையை கொண்டு வரும் எதிர்நீச்சல் சீரியல்.. நந்தினிக்கு காத்திருக்கும் புது ட்விஸ்ட்

இவருடைய உண்மையான முகம் தெரியாமல் நந்தினி இவர் மீது நம்பிக்கை வைத்து குணசேகரனிடம் என் புருஷன் வந்ததும் எனக்கு சப்போர்ட்டாக நிற்பார் என்று சவால் விட்டு இருக்கிறார். இதற்கிடையில் குணசேகரன், அப்பத்தாவிடம் இருந்து ஜீவானந்தத்திற்கு எதிராக கையெழுத்தை வாங்கிக் கொண்டார்.

அதன் பின்னும் இவருடைய வெறி அடங்காமல் அப்பத்தாவை ரூமில் அடைத்து விட்டு சித்திரவதை செய்கிறார். இதை வழக்கம்போல் அங்கு இருக்கும் மருமகள்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். தொடர்ந்து குணசேகருடைய அராஜகம் கூடிக் கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக இவருடைய பேச்சு தற்போது பார்ப்பவர்களை எரிச்சல் அடைய வைக்கிறது.

Also read: மீனாட்சி கிட்டயே டக்கால்டி வேலையை காட்டுற குணசேகரன்.. ஜீவானந்தத்தின் கேரக்டரை சொதப்பிய எதிர்நீச்சல்

இதனால் வரை குணசேகரன் வில்லனாக இருந்தாலும் அவருடைய பேச்சில் ஒரு விதமான நகைச்சுவை இருந்து ரசிக்கும் படியாக அமைந்தது. ஆனால் தற்போது அனைத்தையும் கெடுக்கும் விதமாக குணசேகரன் கதாபாத்திரம் அமைகிறது. அடுத்தபடியாக ஜீவானந்தம், மனைவிக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்கை செய்து முடித்து மகளுடன் கண்கலங்கியப்படியே நிற்கிறார்.

இதனை பார்த்த ஜனனி, ஜீவானந்திடம் உங்களைப் பற்றி தற்போது எனக்கு உண்மையாக தெரிந்து விட்டது. நீங்க யார் என்று புரிந்து கொண்டேன் என்று சொல்கிறார். அதற்கு ஜீவானந்தம் இன்னும் என்னை பற்றி உங்களுக்கு முழுசாக தெரியாது எனக் கூறுகிறார். இனி ஜீவானந்தத்திற்கு ஆதரவாக ஜனனி நிற்கப் போகிறார். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குணசேகரனுக்கு கொடுக்கப் போகும் ஒவ்வொரு அடியும் மரண அடியாக இருக்கப் போகிறது.

Also read:நிஜத்திலும் நாக்கில் நாட்டியம் ஆடிய சனி பகவான்.. எதிர்நீச்சல் குணசேகரனுக்கு வந்த வக்கீல் நோட்டீஸ்

- Advertisement -

Trending News