சம்பளம் தர மாட்டாங்கன்னு கழட்டி விட்ட விஜய்.. லெவலே வேறன்னு வளர்த்தவர்களுக்கு தளபதி கொடுக்கும் டிமிக்கி

விஜய் 250 கோடிகள் சம்பளம் கேட்கிறார். எச் வினோத், சன் பிக்சர்ஸ் படத்திற்கு இவரது சம்பளம் தான் அந்தத் தொகை. இந்த தொகை கொடுத்தால் படம், இல்லை என்றால் வேறு தயாரிப்பாளரை பார்க்கும்படி விஜய் கூறிவிட்டார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏஜிஎஸ், சன் பிக்சர்ஸ், லலித், எனத் தொடர்ந்து இவர்களுக்கு மட்டுமே படம் பண்ணுகிறார் விஜய். பழைய வளர்த்துவிட்ட 3 தயாரிப்பாளர்களுக்கு இன்று வரை டிமிக்கி கொடுத்து வருகிறார். அதற்கு காரணம் விஜய் சம்பளம் மட்டும் தான். இப்பொழுது விஜய் லெவலை வேறு, அவர்கள் 15 ஆண்டுகள் பின் தங்கி இருக்கிறார்கள்.

லெவலே வேறன்னு வளர்த்தவர்களுக்கு தளபதி கொடுக்கும் டிமிக்கி

சூப்பர் குட் ஃபிலிம்ஸ்: ஆர் பி சவுத்ரி எப்படியாவது தனது கம்பெனியின் நூறாவது படத்தில் விஜய் தான் நடிக்க வேண்டும் என ஒரு பெரிய திட்டம் போட்டு வந்தார். ஆனால் அது எட்டாக்கனியாகவே மாறிவிட்டது. விஜய் கேட்கும் சம்பளத்தை அவரால் கொடுக்க முடியவில்லை அது மட்டும் இன்றி விஜய் தான் கைகாட்டும் டைரக்டர் வேண்டுமென்று கூறுவார்.

சத்யஜோதி: விஜய்க்கு பல சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்தவர்கள் சத்யஜோதி நிறுவனம். இவர்களுக்கும் இப்பொழுது விஜய் படம் பண்ணுவதில்லை. ஆரம்பத்தில் விஜய் வாங்கிய சம்பளத்தை, இவர்கள் வருட கணக்கை மட்டும் வைத்து கொடுக்க முன் வருகிறார்கள் அதனால் இவர்களுக்கு டாட்டா போட்டு வருகிறார் விஜய்.

ராஜ்கமல் பிலிம்ஸ்: கமல் நீண்ட காலமாகவே விஜய்யை வைத்து ஒரு படம் பண்ணுவதற்கு கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் விஜய் சொந்த காசு இருந்தால் மட்டுமே படம் பண்ண சம்மதிக்கிறார். பைனான்ஸ் வாங்கி பண்ணுவதென்றால் ரிலீஸ் சமயத்தில் பிரச்சனை வரும் என யோசிக்கிறார்.

- Advertisement -