வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

அடுத்த கல்யாணத்துக்கு பிள்ளையார் சுழி போடும் குணசேகரன்.. டம்மியாக இருந்து வேடிக்கை பார்க்கும் ஜனனி

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த பூகம்பத்திற்கான பிள்ளையார் சுழியை போட்டுவிட்டார்கள். ஆரம்பத்தில் எல்லோரையும் தன்னுடைய கையில் அடக்கிக் கொண்டு ஆணவத்தின் உச்சத்தில் இருந்த குணசேகரன், தற்போது  படிப்படியாக தன்னுடைய கௌரவத்தை குடும்பத்தின் முன் இழந்து வெத்துவேட்டாகவே இருந்து வருகிறார்.

அதற்கேற்ற மாதிரி அந்த வீட்டில் இருக்கும் மருமகள்கள் எதிர்த்துப் பேசியதோடுமட்டுமல்லாமல், இவர்களின் குழந்தைகளும் குணசேகரனுக்கு எதிராக பேச ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் தர்ஷினியை தேடி அவருடைய ஆண் நண்பர் ஒருவர் முதன் முதலாக வீட்டுக்கு வருகிறார். அப்பொழுது குணசேகரன், வந்திருப்பது தர்ஷன் ஃபிரண்ட் என்று நினைத்து தர்ஷனை கூப்பிடுகிறார்.

Also read: ஜான்சி ராணியை வைத்து டிஆர்பி ரேட்டிங்கை கூட்டும் ஜீ தமிழ்.. டபுள் மடங்கு சம்பளத்தை கொடுத்து இழுத்த சீரியல்

ஆனால் தர்ஷன் இது என்னுடைய ஃபிரண்ட் இல்லை என்று சொன்னதும், அந்தப் பையன் நான் தர்ஷனின் நண்பர் என்று கூறுகிறார். இதை கேட்டதும் குணசேகரன் மூஞ்சியில் ஈ ஆடலை. உடனே வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பித்த குணசேகரனை, ஒத்த வார்த்தையில் இவருடைய மகள் என்கிட்ட இந்த மாதிரி குதித்து விட்டு வராதீங்க. அதற்கான ஆளு நான் கிடையாது என்று சொல்லி இவருடைய நண்பரை மாடிக்கு அழைத்துப் போகிறார்.

இதற்கிடையில் இவரை தேடி கல்யாண பத்திரிக்கை கொடுக்க வந்த ஒருவர் இதையெல்லாம் பார்த்து குணசேகரனை தனியாக அழைத்து பேசுகிறார். என் வீட்டிலும் இதே மாதிரி பிரச்சனை ஆரம்பித்ததால் தான் என்னுடைய மகளுக்கு உடனே திருமண ஏற்பாடு செய்ய ஆரம்பித்து விட்டேன்.

Also read: அழுகாட்சியாக உருட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. விரைவில் போட உள்ள எண்டு கார்டு

இவர்களை ரொம்ப பேச விடக்கூடாது, அதற்குள் கால் கட்டு போட்டுவிட்டால் நம் கடமை முடிந்து விட்டது. கூடிய சீக்கிரம் நீயும் உன் பொண்ணுக்கு ஒரு நல்ல வரனை பார்த்து முடித்துவிடு என்று சொல்கிறார். ஏற்கனவே குணசேகரன் எப்படியாப்பட்டவர் என்று தெரிந்தும் நன்றாக வந்து பத்த வச்சுட்டு போயிட்டாரு.

இனி என்ன அடுத்த கல்யாணத்துக்கு பிள்ளையார் சுழியை போட்டு ஆரம்பிக்க போகிறார். இதையும் இந்த ஜனனி டம்மியாக இருந்து வேடிக்கை மட்டும் தான் பார்க்கப் போகிறார். ஆனால் இவரைவிட தற்போது ரேணுகா, நந்தினி மற்றும் ஈஸ்வரி, குணசேகரனுக்கு ஒவ்வொரு நாளும் சரியான முறையில் பாடத்தை கற்பித்து வருகிறார்கள். அதனால் இனிமேல் இந்த மாதிரி ஒரு அநியாயம் இவர்களுடைய குழந்தைகளுக்கு நடக்காத படி அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

Also read: பாக்கியாவால் வில்லனாக மாறி புலம்பி தவிக்கும் கோபி.. உசுப்பேத்தி விடும் ராதிகா

- Advertisement -

Trending News